ஐயையோ உங்கள் மொபைல் ஓவர் ஹீட்டாகுதா? அப்போ இந்த மிஸ்டேக்கை தவிர்ப்பது நல்லது!!
இன்று உலகம் நவீனமாகி விட்டது.நாம் தொழில் நுட்பத்தில் பல சாதனைகளை புரிந்து வருகின்றோம்.அசுர வளர்ச்சி கண்டு வரும் மின்னனு தொழில் நுட்பம் மனித வாழ்க்கையை எந்த அளவிற்கு எளிமையாக்குகிறதோ அந்தளவிற்கு ஆபத்துகள் நிறைந்திருக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது.இன்று பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வருகின்றனர்.
15 வருடங்களுக்கு முன்னர் ஸ்மார்ட் போன் என்றால் என்ன என்று தெரியாமல் இருந்த நமது வாழ்வில் அவை ஒரு முக்கிய அங்கமாக மாறிவிட்டது.காலையில் கண் விழித்தது முதல் இரவு உறங்கச் செல்வதற்கு முன்னர் வரை ஓய்வின்றி அதனை உபயோகித்து வருகின்றோம்.இதனால் மொபைல் சூடாகி வெடிக்கும் நிலை உருவாகிறது.
சிலர் சார்ஜ் 1% வரும் வரை பயன்படுத்துவார்கள்.பின்னர் சார்ஜ் போடப்படி நெடுநேரம் பயன்படுத்துவார்கள்.இவ்வாறு செய்வது மிகவும் ஆபத்தான செயல்.சார்ஜ் செய்தவாறு போன் பயன்படுத்தினால் அவை வெடிக்க வாய்ப்பிருக்கிறது.
அதேபோல் சார்ஜ் செய்த பின்னர் சுவிட்ச் ஆப் செய்யாமல் போனை எடுக்க கூடாது.சிலர் சார்ஜ் செய்த பின்னர் சுவிட்ச் ஆப் செய்யாமல் போனை எடுக்கின்றனர்.இதனால் சார்ஜரில் வெளியேறும் மின்சாரத்தால் ஆபத்துகள் நேரிட வாய்ப்பிருக்கிறது.அதேபோல் அடிக்கடி சார்ஜ் போடுவதால் மொபைல் சூடாகி வெடித்து விடும் அபாயம் உள்ளது.எனவே மொபைலில் 50% சார்ஜ் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
மொபைல் சார்ஜ் செய்த பின்னர் சுவிட்ச் ஆப் செய்து சார்ஜரை ஒரு இடத்தில் வைத்துவிடுங்கள்.ஒரு சிலர் மணி கணக்கில் போனில் பேசும் பழக்கம் கொண்டிருப்பார்.இதனால் உங்கள் மொபைல் வெப்பமடைந்து வெடிக்கும் ஆபத்து உள்ளது.எனவே இதுபோன்ற தவறுகளை இனி செய்யாமல் பார்த்துக் கொள்வது நல்லது.