இன்று மாலை வெளியாகிறது ஹே ராம் திரைப்படம்… யூடியூபில் இலவசமாக பார்க்கலாம் என்று அறிவிப்பு… 

0
92

இன்று மாலை வெளியாகிறது ஹே ராம் திரைப்படம்… யூடியூபில் இலவசமாக பார்க்கலாம் என்று அறிவிப்பு…

 

நடிகர் கமல்ஹாசன் இயக்கி நடித்த ஹே ராம் திரைப்படத்தை இன்று(ஆகஸ்ட்15) யூடியூபில் வெளியாகின்றது என்றும் அதை யூடியூபில் இலவசமாக பார்க்கலாம் என்றும் அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

 

நடிகர் கமல்ஹாசன் அவர்கள் இயக்கி நடித்த ஹே ராம் திரைப்படம் 2000வது ஆண்டு வெளியானது. இந்த திரைப்படத்தில் பாலிவுட் பிரபலம் நடிகர் ஷாரூக் கான் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் ஹேம மாலினி, ராணி முகர்ஜி, நாசர், சவுகார் ஜானகி, வி.எஸ் இராகவன், டெல்லி கணேஷ், ஒய்.ஜி மகேந்திரன், சந்த்ரஹாசன், வையாபுரி, ஸ்ருதி ஹாசன்.மற்றும் பலர் நடித்திருந்தனர்.

 

ஹே ராம் திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரித்திருந்தது. இசைஞானி இளையராஜா அவர்கள் ஹே ராம் திரைப்படத்திற்கு இசை அமைத்திருந்தார். ஹே ராம் திரைப்படம் வட இந்தியாவிலும் இன்றைய பாகிஸ்தானிலும் ஏற்பட்ட கலவரங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். ஹே ராம் திரைப்படம் 2000வது ஆண்டில் வெளியாகி மாபெரும் ஹிட் கொடுத்த நிலையில் மீண்டும் இந்த திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆகின்றது.

 

ரீ-ரிலீஸ் ஆகும் ஹே ராம் திரைப்படத்தை  திரையரங்குளில் டிக்கெட் எடுத்து பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. 23 ஆண்டுகளுக்கு பிறகு  ஹே ராம் திரைப்படம் யூடியூப் பக்கத்தில் ரீ-ரிலீஸ் ஆவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

 

இன்று(ஆகஸ்ட்15) மாலை 6 மணிக்கு ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் ஹே ராம் திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த திரைப்படத்தை மக்கள் அனைவரும் இலவசமாக பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.