‘லே’ பகுதியில் சிக்கிய மலையேற்ற வீரர்… உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்… 

0
30

‘லே’ பகுதியில் சிக்கிய மலையேற்ற வீரர்… உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்…

 

லே பகுதியில் சிக்கி இருந்த மலையேற்ற வீரர் ஒருவர் ஹெலிகாப்டர் மூலமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

இந்தியாவில் உயரமான மலைப் பகுதியான லடாக்கின் எம்.டி நன் தள முகாம் உள்ளது. அந்த எம்.டி நன் தள முகாமில் இருந்து மலையேற்ற வீரர் ஒருவர் மலையேறத் தொடங்கினார். அவ்வாறு மலையேறத் தொடங்கிய பின்னர் அந்த மலையேற்ற வீரர் குறிப்பிட தூரத்திற்கு பின்னர் சிக்கிக் கொண்டார்.

 

மலையேற்ற வீரர் உயரமான மலைப்பகுதியில் சிக்கிக் கொண்ட தகவல் அறிந்த மக்கள் தொடர்பு அதிகாரி இந்திய விமானப்படைக்கு தகவல் கொடுத்தார். அதன் பின்னர் இந்திய விமானப் படையை சேர்ந்தவர்கள் ஹெலிக்காப்டரை எடுத்துக் கொண்டு மலையேற்ற வீரர் சிக்கியிருந்த இடத்திற்கு சென்றனர்.

 

பின்னர் உயரமான மலைப் பகுதியில் சிக்கியிருந்த மலையேற்று வீரரை உயிருடன் மீட்டு ஹெலிகாப்டர் மூலமாக கீழே அழைத்து வரப்பட்டார். மலையேற்று வீரரை உயிருடன் மீட்டது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றது.

 

அந்த வீடியோவில் “இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர் யூனிட் உயரமான மலைப் பகுதியான லே பகுதியில் இருந்து சிக்கியிருந்த மலையேற்ற வீரரை பத்திரமாக மீட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் மர்கா பள்ளத்தாக்கில் சிக்கியிருந்த 5 பேரை இந்திய விமானப்படை மீட்டது குறிப்பிடத்தக்கது.