பெங்களூரை மையமாகக் கொண்டு செயல்படும் ஹிந்துஜா கிலோபல் சொல்யூஷன்(HGS) ரூ. 44.8கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் பங்குச்சந்தை இடம் கூறியதாவது: HGS நிறுவனம் 2020 மார்ச் காலாண்டில் ரூ. 44.8கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.
இது கடந்த 2019 ஜனவரி-மார்ச் காலாண்டில் ஈட்டிய நிகர லாபம் ரூ. 54.4கோடி உடன் ஒப்பிடுகையில் 17.8 சதவீதம் குறைவாகும்.
அதேசமயம் இதே காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 1,284.6 கோடியிலிருந்து 2.6 சதவீதம் வீழ்ச்சி கண்ட ரூ. 1,318.6 கோடியானது.
நிகர விற்பனை கடந்த 2019-20 முழு நிகழாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 16.6 சதவீதம் அதிகரித்து ரூ. 205.6 கோடியாகவும், நிகர விற்பனை 8.7 சதவீதம் உயர்ந்து ரூ. 5,235.4கோடியாகவும் இருந்தது என ஹிந்துஜா கிலோபல் சொல்யூஷன்(HGS) பங்குச்சந்தை இடம் தெரிவித்துள்ளது.