தலையில் வைக்கவே தயங்கும் செம்பருத்தி பூவில் இவ்வளவு பயன்களா?

0
235
hibiscus flower benefits
hibiscus flower benefits

தலையில் வைக்கவே தயங்கும் செம்பருத்தி பூவில் இவ்வளவு பயன்களா?

தற்கால பெண்கள் யாரும் செம்பருத்தி பூவை தலையில் வைப்பதில்லை. ஆனால்  இந்த செம்பருத்தி நமக்கு எப்படியெல்லாம் உதவுது பாருங்க.

செம்பருத்தி இலை மற்றும் பூவை அரைத்து தலைக்கு கண்டிசனராக  போட்டு தலைக்கு குளிக்கலாம் அப்படி வாரம் ஒருமுறை செய்ய முடி கருமையாகவும், அடர்த்தியாகவும், பளபளப்பாகவும், நீளமாகவும் வளர உதவும்.

செம்பருத்தி பூவை தினமும் சாப்பிட்டு வந்தால் இதயம் சம்மந்தமான பிரச்சனைகள் நீங்கும். உடல் சூடு காரணமாக ஏற்படும் புண்கள் இந்த செம்பருத்தி பூவை சாப்பிடுவதன் மூலம் வாய்புண், வயிற்றுபுண் குணமடையயும்.

முகத்தில் அரைத்து பூசி வர முகம் பளபளப்பாக பொலிவுடன் இருக்கும்.

பூ மற்றும் இலையை சிகைக்காய் பவுடர் அறைக்கும்போது சேர்த்து அரைத்து தலைக்கு போட்டு குளித்து வர முடி நீளமாக வளரும்.

பூவை காயவைத்து மிக்ஸியில் அரைத்து பவுடர் செய்து வைத்து டீயாகவும் போட்டு குடிக்கலாம். இதனால் உடல் வெப்பதை நீக்கி உடல் குளிர்ச்சி அடையும். கர்ப்பப்பை நோய், இதயநோய், இரத்த அழுதநோய் சீராகும்.

பூவுடன் சம அளவு மருதம் பட்டை தூள் சேர்த்து சாப்பிட்டால் இரும்பு சத்து அதிகரிக்கும் ரத்தசோகை நீங்கும்.

Previous articleகர்ப்பிணி பெண்கள் அனைவரும் கட்டாயம் இதை சாப்பிட வேண்டும்!
Next articleஆண்களே தாது உற்பத்திக்கு இதை தவறாமல் சாப்பிடுங்க!