தலைமுடி பிரச்சனைகளை குணப்படுத்தும் செம்பருத்தி பூ எண்ணெய்! இதை எவ்வாறு தயார் செய்வது
தலைமுடி சார்ந்த அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யும் செம்பருத்தி பூ எண்ணெய்யை தயாரிக்க தேவையான பொருட்கள் என்னென்ன அதை எவ்வாறு தயார் செய்வது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.
செம்பருத்தி பூவை தலைக்கு விதவிதமாக பயன்படுத்தலாம். செம்பருத்தி பூவை அரைத்து அதை தலையில் தேய்க்கலாம். அதனுடன் சில பொருட்களை சேர்த்து பயன்படுத்தலாம். எண்ணெய் தயாரித்து தலைக்கு பயன்படுத்தலாம். செம்பருத்தி பூ டீ தயார் செய்து குடிக்கலாம். இது போல பல வகையில் செம்பருத்தியை பயன்படுத்தினாலும் அதில் இருக்கும் பொதுவான நற்குணம் தலைமுடிக்கு நன்மையை தருவது ஆகும்.
செம்பருத்தி பூவை தலைக்கு, சருமத்திற்கு மற்றும் பல நோய்களுக்கு பயன்படுத்தலாம். இந்த பதிவில் தலைமுடி சார்ந்த பிரச்சனைகள் அனைத்தையும் குணப்படுத்த செம்பருத்தியை பயன்படுத்தி எவ்வாறு எண்ணெய் தயாரிப்பது என்பது பற்றி பார்க்கலாம்.
செம்பருத்தி பூ எண்ணெய் தயாரிக்க தேவையான பொருட்கள்…
* செம்பருத்தி பூ – 15 பூ
* தேங்காய் எண்ணெய் – 100 மிலி
* பாதாம் எண்ணெய் – 25 மிலி
* ஆலிவ் எண்ணெய் – 25 மிலி
* விளக்கெண்ணெய் – 25 மிலி
செம்பருத்தி பூ எண்ணெய் தயாரிக்கும் முறை…
* செம்பருத்தி பூ எண்ணெய் தயாரிக்க முதலில் 15 செம்பருத்தி பூக்களை அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய் இவை அனைத்தையும் அந்த கடாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின்னர் இதை மிதமான தீயில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். இதை கலந்துவிட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
* அதன் பின்னர் இந்த எண்ணெயில் அரைத்து வைத்துள்ள செம்பருத்தி பூ விழுதை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை கலந்துவிட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
* எண்ணெய் நிறம் மாறும் வரை காய்ச்ச வேண்டும். நிறம் மாறிய பிறகு அடுப்பை ஆஃப் செய்து விட வேண்டும்.
* அதன் பின்னர் இந்த எண்ணெயை ஆற. விட வேண்டும். ஆறிய பிறகு ஒருநாள் கழித்து இதை வடிகட்டி தலைக்கு பயன்படுத்தலாம்.