கண் திருஷ்டி ஒழிய வீட்டு வாசலில் வைக்கப்படும் எலுமிச்சை பழத்தில் இந்த இரன்டு பொருளை மறைத்து வையுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!!

Photo of author

By Divya

கண் திருஷ்டி ஒழிய வீட்டு வாசலில் வைக்கப்படும் எலுமிச்சை பழத்தில் இந்த இரன்டு பொருளை மறைத்து வையுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!!

கண் திருஷ்டி என்றால் இருக்கும் ஒருவரை பார்த்து இல்லாதவர் பொறாமைப்படுவது என்று சொல்லப்படுகிறது.புதிதாக வீடு கட்டினால் வீட்டிற்கு முன் கண் திருஷ்டி விநாயர்கள் படங்களை மாட்டுவது,வீட்டு வாசல் கதவுகளில் எலுமிச்சை பழத்தை நூலில் கோர்த்து தொங்க விடுவது என்று பல முறைகளை கடைபிடித்து வருகிறோம்.காரணம் யாருடைய கெட்ட பார்வையும் வீட்டின் மேல் படக்கூடாது என்பதற்காக தான்.

நாம் எது செய்தாலும் அண்டை வீட்டு ஆட்கள் நோட்டமிட்டு கொண்டே இருப்பார்கள்.எங்கே வளர்ந்து விடுவார்களோ என்று ஒருவித பொறாமையில் தான் அதிக நபர்கள் இருக்கின்றனர்.இவர்கள் மத்தியில் வாழ்க்கையை சிறப்பாக வாழ வேண்டுமென்றால் நாம் சில வழிகளை கடைபிடித்தாக வேண்டும்.

எப்பொழுது ஒழிவார்கள்,வாழ்க்கையில் இறக்கத்தை காண்பார்கள் என்று கண்களால் கண்டு பொறாமைப்படுவதை தான் கண் திருஷ்டி என்று சொல்கிறோம்.இதற்காக நம் அனைவரின் வீட்டு வாசலிலும் எலுமிச்சை பழத்தை இரண்டாக அறுத்து அதில் குங்குமம் சேர்த்து வைத்திருப்போம்.ஆனால் அதில் மேலும் 2 பொருட்களை சேர்த்தால் யாருடைய கெட்ட பார்வையும் வீட்டின் மேல் படாது.அதே சமயம் வீட்டில் செல்வம் பெருக தொடங்கும்.வீட்டு வாசல் முன் எலுமிச்சை பழத்தை வைக்க முக்கிய காரணம் தீய சக்திகளை எண்ணங்கள் வீட்டின் மேல் படாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான்.அதோடு நம் வீட்டில் கெட்ட சக்தி நுழையாமலும் இருக்கும்.

எலுமிச்சை பழத்தில் 2 பொருட்களை மறைத்து மேலே குங்குமம் தடவி வீட்டு வாசலில் வைத்தால் எவ்வளவு பெரிய கண் திருஷ்டியாக இருந்தாலும் அவை அடியோடு ஒழிந்து விடும்.

*மஞ்சள் நிறத்தில் அடிபடாத,கருப்பு இல்லாத எலுமிச்சை பழத்தை கழுவி இரண்டாக அரிந்து கொள்ளவும்.

*பாதியாக அறுத்து வைத்துள்ள எலுமிச்சை பழம் ஒவ்வொன்றிலும் கல் உப்பு ஒன்று எடுத்து யாருக்கும் தெரியாத அளவிற்கு அதில் மறைத்து வைக்க வேண்டும்.

*பின்னர் 6 மிளகு எடுத்து உப்பு கல் வைத்துள்ள இடத்திற்கு அப்போசிட் பகுதியில் சொருகி வைக்கவும்.பாதியாக நறுக்கி வைத்துள்ள 2 எலுமிச்சை ஒவ்வொன்றிலும் 3 மிளகு வைக்க வேண்டும்.

*பின்னர் அதன் மேல் குங்குமம் தடவி வீட்டு வாசலில் வைக்க வேண்டும்.இதனை வெள்ளி அல்லது ஞாயிற்று கிழமையில் செய்து வைக்கலாம்.இப்படி செய்தால் கண் திருஷ்டி அடியோடு ஒழிந்து விடும்.