காதலியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது குற்றமில்லை!! நீதிமன்றம் அறிவிப்பு!!

Photo of author

By Sakthi

Madurai High Court:காதலிப்பவர்கள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது குற்றமில்லை என உயர்நீதிமன்ற நீதிபதி  ஆனந்த் வெங்கடேஷ்  கருத்து தெரிவித்து இருக்கிறார்.

தூத்துக்குடி  மாவட்டத்தை  சேர்ந்த பெண் ஒருவர் தன்னை இளைஞன் ஒருவர் காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுப்பதாக  போலீசாரில்  புகார் தெரிவித்து இருந்தார்.  அப்பெண் கொடுத்த புகாரில்  அந்த இளைஞன் காதலிக்கும் போது தன்னை    கட்டி பிடித்து முத்தம் கொடுத்து இருக்கிறார் எனக் குறிப்பிட்டு இருந்தார்.

எனவே தூத்துக்குடி  போலீசார் அந்த இளைஞரை 354 ஏ பிரிவின் கீழ் பதிவு செய்தனர். இதனை எதிர்த்து அந்த இளைஞன்  மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்  கொடுத்து இருந்தார். இந்த மனு தாக்கல் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்  அமர்வில் விசாரணை வந்தது. மேலும் இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடியான கருத்தை தெரிவித்தார்.

அதில் இளம் வயதில் காதலித்து வரும் ஆண் ,பெண் இருவரும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது குற்றமில்ல இது இயல்பாகவே பார்க்கப்படுகிறது என்று கூறினார். எனவே இளைஞர் மீது 354 ஏ பிரிவின் கீழ்  பதிவு  செய்த வழக்கை ரத்து செய்கிறேன் என்றார். மேலும் காதலித்து திருமணம் செய்வதாக ஏமாற்றியதற்கு  விசாரணை நடைபெறும் என்று கூறினார்.

சமீப காலத்திற்கு முன்  நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்,   சிறார் ஆபாசப் படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றம் இல்லை என  தீர்ப்பு அறிவித்தார்.  அவர் அறிவித்த  தீர்ப்பு கண்டனத்திற்கு உள்ளாகியது. பின் அத் தீர்ப்பு  ரத்து செய்யப்பட்டுள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.