உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி, சாலை விரிவாக்கத்திற்காக ஒரு மரம் வெட்டினால் 10 மரக்கன்றுகள் நட வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, சாலை விரிவாக்கத்திற்காக ஒரு மரத்தை வெட்டினால், அதற்கு ஈடாக 10 மரக்கன்றுகளை நட்டு அதனை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்றும் இல்லையெனில் சாலை விரிவாக்கத்திற்காக மரங்களை வெட்ட வேண்டாம் என்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மேலும், சென்னை – மதுரை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக எத்தனை மரங்கள் வெட்டப்பட்டுள்ளது? என்றும் கேள்வி எழுப்பினர். இந்த வழக்கில் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டதோடு, வழக்கை நவம்பர் 5ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.