சென்னை உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு! குதூகலத்தில் முதலமைச்சர் ஸ்டாலின்!

Photo of author

By Sakthi

சென்ற அதிமுக ஆட்சிக் காலத்தின்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக மீது பல விமர்சனங்களை முன்வைத்தார் இதில் பல தலைவர்களின் பெயரும் அடிபட்டது இதனால் தமிழகம் முழுவதிலும் அதிமுகவின் நற்பெயருக்கும் களங்கம் விளைந்தது.இதன் காரணமாக, தான் சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் அதிமுகவை பின்னுக்குத் தள்ளி திமுக ஆட்சி அமைத்து இருக்கிறது.அதேபோல அப்போது ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக மீது குற்றச்சாட்டை முன்வைக்கும் பல எதிர்க்கட்சிகள் மீது அதிமுக சார்பாக பல அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த வகையில், சென்ற பத்து வருட கால அதிமுக ஆட்சிக்காலத்தில் திமுக உட்பட பல எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது பல அவதூறு வழக்குகள் போடப்பட்டன. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்பாகவும் வாக்கி டாக்கி கொள்முதல் குறித்து மீன்வளத்துறை அமைச்சராக இருந்த ஜெயக்குமார் தொடர்பாகவும், அந்த சமயத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த திமுக தலைவரும் தற்போதைய முதலமைச்சர் மு க ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கள் இவருடைய பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் விதத்தில் இருப்பதாக தெரிவித்து அவர்களுடைய சார்பாக சென்ற பிப்ரவரி மாதம் ஸ்டாலின் மீது தமிழக அரசு 2 அவதூறு வழக்குகளை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதேபோல அதிமுக அரசுக்கு எதிராகவும், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராகவும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தது 17 கிரிமினல் அவதூறு வழக்குகள் தமிழக அரசின் சார்பாக ஸ்டாலினுக்கு எதிராக போடப்பட்டன.இதனைத் தொடர்ந்து திமுக ஆட்சி அமைத்த சூழ்நிலையில், சுமார் 130 அவதூறு வழக்குகளை திரும்பப் பெற முடிவெடுத்துள்ளதாக தமிழக அரசு சார்பாக கூறப்பட்டது. இந்த சூழ்நிலையில்தான் கடந்த ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதி சட்டசபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை திரும்பப் பெறுவதற்கு முன்னால் சம்பந்தப்பட்ட மாநில உயர் நீதிமன்றத்தில் அனுமதி பெறவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் அடிப்படையில் தான் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கானது நீதிபதி நிர்மல்குமார் முன் நேற்றைய தினம் விசாரணைக்கு வந்தது. அந்த சமயத்தில் தமிழக அரசு சார்பாக முதலமைச்சர் ஸ்டாலின் மீதான அவதூறு வழக்குகளை திரும்பப் பெறுவதற்கான அரசாணை அரசாணை தாக்கல் செய்யப்பட்டது.அந்த சமயம் வழக்குகள் குறித்த விவரங்களை அட்டவணையாக தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி இந்த வழக்குகளில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆஜராக நிர்பந்தம் செய்யக்கூடாது என்று சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருக்கிறார். அதோடு இந்த வழக்கில் அடுத்த மாதம் எட்டாம் தேதி இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்து வழக்கை ஒத்திவைத்துள்ளார்.