ரேடிசன் ஹோட்டலை இடிக்க உயர்நீதிமன்ற உத்தரவு! அதிர்ச்சியில் ஹோட்டல் உரிமையாளர்!

Photo of author

By Rupa

ரேடிசன் ஹோட்டலை இடிக்க உயர்நீதிமன்ற உத்தரவு! அதிர்ச்சியில் ஹோட்டல் உரிமையாளர்!

மாமல்லபுரம் கடற்கரையில் ரேடிசன் ப்ளூ நிறுவனத்தால் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் சி.ஆர்.இசட் அனுமதியை பெறாமல் கட்டப்பட்டது. இது அனுமதி பெறாமல் கட்டப்பட்டது என சென்னையை சேர்ந்த மீனவ செயற்பாட்டாளர் எம்.ஆர்.தியாகராஜன் தென் மண்டல தேசிய பசுமை தீர்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன்,நிபுணத்துவ உறுப்பினர் உறுப்பினர் சாய்பால் தாஸ் குப்தா ஆகியோர் கொண்ட அமர்வு,ரேடிசன் ப்ளூ நிறுவனத்தால் 1,100 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்ட கட்டடங்கள்,இரண்டு மாதங்களுக்குள் அந்த நிறுவனமே இடித்து அகற்ற வேண்டும் என தீர்பளித்துள்ளது.ரேடிசன் ப்ளூ நிறுவனம் அகற்றாவிட்டால் மாசு கட்டுபாடு வாரியம் அகற்றும் என தெரிவித்துள்ளனர்.

அக்கட்டிடத்தை கட்ட அனுமதி பெறாமல் கட்டியதால் சுற்றுசூழலுக்கு ஏற்பட்ட மாசுக்கு ரூ.10 கோடி ரூபாய் இழப்பீட்டை தமிழ்நாடு கடற்கரை மண்டல ஆணையத்திடம் செலுத்த வேண்டும் எனவும் தீர்பளித்தார்.கடற்கரையில் இருந்து 200 முதல் 500 மீட்டர் தொலைவில் இருக்கும் கட்டடங்களை வரைமுரைபடுத்த மத்திய அரசை அணுகலாம் என குறிபிட்டுள்ளது.அதுவரை அந்த கட்டுமானங்களை பயன்படுத்தக் கூடாது என தெரிவித்துள்ளது.