மெரினா குறித்து தமிழக அரசுக்கும் சென்னை மாநகராட்சிக்கும் உயர்நீதிமன்ற உத்தரவு !!

0
135

ஊரடங்கு காரணமாக இருப்பினும் , பொதுமக்களிடையே  தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதியில் பொதுமக்களை அனுமதிப்பது குறித்து என்ன முடிவு எடுக்கப் பட்டுள்ளது ,என்பதனை குறித்து வருகின்ற அக்டோபர் 5 ஆம் தேதி விளக்கமளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கிய வழங்கப்பட்ட தளர்வுகளை சுட்டிக்காட்டிய நீதிபதிகள் ,இந்த உத்தரவை பற்றி கேட்டுள்ளனர். ஊரடங்கு காரணமாக முடக்கப்பட்ட மெரினா உள்ளிட்ட  கடற்கரைக்கு  பொதுமக்களை அனுமதிப்பதில் அரசு  என்ன முடிவு எடுத்துள்ளது என்பது குறித்து,தமிழக அரசும் மற்றும் சென்னை மாநகராட்சியும் பதிலளிக்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் ,சென்னை கடற்கரையில் தள்ளுவண்டி கடைகளுக்கான டெண்டர் குறித்த தகவல்களையும் அறிக்கையாக அந்த மனுவில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Previous articleஇந்தியாவில் ஒரே நாளில் 70,589 பேர் பாதிப்பு: இதுவரை 96,318 பேர் உயிரிழப்பு!
Next articleவாய்க்கால் நிரம்பி வயலில் தண்ணீர் சென்றதனால் விவசாயிகள் போராட்டம் :!