ஒடிசா இரயில் விபத்தை விசாரிக்க உயர்மட்ட குழு! மத்திய அமைச்சர் அஸ்வினி பேட்டி!
ஒடிசாவில் நடந்த இரயில் விபத்தை விசாரிக்க உயர்மட்ட குழு அமைத்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் கூறியுள்ளார்.
நேற்று(ஜூன் 2) ஒடிசா மாநிலத்தில் சரக்கு இரயிலும் பயணிகள் எக்ஸ்பிரஸ் இரயில் இரண்டும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் 900க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் இந்த விபத்து குறித்து பேட்டி அளித்துள்ளார்.
விபத்து நடத்த இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வரும் மத்திய அமைச்சர் அஸ்வணி வைஷ்ணவ் அவர்கள் இந்த விபத்து குறித்து “விபத்தில் பலியானவர்களுக்கு ஆழ்ந்தஸிரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ரயில் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இரயில்வே, மத்திய, மாநில மீட்பு படையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். காயம் அடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க ஏற்படுகள் நடந்து வருகின்றது. இரயில் விபத்து தொடர்பாக விசாரணை நடத்த உயர்மட்டகுழு அமைத்துள்ளோம். சுதந்திரமான விசாரனை நடத்தப்படும்” என்று கூறினார்.