திமுக பொதுக்கூட்டங்கள் ஒத்தி வைப்பு! தலைமை கழகம் அறிவிப்பு!!

0
156
#image_title

திமுக பொதுக்கூட்டங்கள் ஒத்தி வைப்பு! தலைமை கழகம் அறிவிப்பு!

கலைஞர் கருணாநிதி அவர்களின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று(ஜூன்3) நடக்கவிருந்த நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் அனைத்தும் ஒத்தி வைக்கப்படுவதாக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ், சரக்கு இரயில் ஆகிய மூன்றும் ஒன்றுக்கொன்று மோதி பெரும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 280க்குப் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்த இரயில் விபத்து நாட்டு மக்கள் அனைவரையும் சேகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்தில் 900க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த சோகமான சூழ்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்களை நடத்துவது சரியல்ல என்று கழகத் தலைவர் முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் முடிவு செய்துள்ளார். இந்த சோகமான நாளில் கருணாநிதி அவர்களின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த அனைத்து நிகழ்ச்சிகளும், பொதுக்கூட்டங்களும் ரத்து செய்யப்படுகிறது. இன்றைய நாளில் கலைஞர் கருணாநிதி அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு இரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இன்று வடசென்னையில் நடக்கும் என அறிவிக்கப்பட்ட மதச்சார்பற்ற முற்பேக்குத் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் வேறு ஒரு நாளில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.