மீண்டும் மதுரை வரும் தவெக தலைவர் விஜய்!.. விமான நிலையத்தில் பாதுகாப்பு!…

Photo of author

By அசோக்

மீண்டும் மதுரை வரும் தவெக தலைவர் விஜய்!.. விமான நிலையத்தில் பாதுகாப்பு!…

அசோக்

vijay

நடிகர் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் நடிகராக இருக்கும்போதே அவரை நேரில் பார்க்கவேண்டும் என பலரும் ஆசைப்படுவார்கள். ஆனால், விஜயை நேரில் பார்ப்பது எளிது இல்லை. வீட்டிலோ இல்லை ஷூட்டிங் ஸ்பாட்டிலோ இருக்கும் அவரை பார்க்கவே முடியாது. விஜய் வீட்டில் இருக்கிறாரா? இல்லை ஷூட்டிங்கிற்காக வேறு எங்கேயாவது போயிருக்கிறாரா என்பது யாருக்கும் தெரியாது. அவர் விமான நிலையத்திற்கு செல்லும்போது கூட யாருக்கும் தெரியாது.

ஆனால், தற்போது விஜய் அரசியல்வாதி ஆகிவிட்டதால் அவர் எங்கு சென்றாலும் தெரிந்துவிடுகிறது. ஏனெனில், இது தொடர்பான செய்திகளை உடனே செய்தி சேனல்களில் வெளியிட்டு விடுகிறார்கள். இதனால் விஜய் எங்கு போனாலும் ரசிகர்கள் கூடிவிடுகிறார்கள். சமீபத்தில் கொடைக்கானல் செல்வதற்காக மதுரைக்கு விஜய் வந்தபோது விமான நிலையத்தில் ரசிகர்களும், தவெகவினரும் கூடிவிட்டனர். அப்போது விமான நிலையத்தில் பல பொருட்கள் சேதமடைந்தது.

vijay

அதற்கு சில நாட்களுக்கு முன் கோவையில் நடந்த முகவர் பூத் கமிட்டியில் கலந்துகொள்ள விஜய் வந்தபோது கோவை விமான நிலையத்தில் கூட்டம் கூடி பொருட்களை தள்ளி செல்லும் பல டிராலிகள் சேதமடிடைந்தது. இது தொடர்பாக தவெகவினர் மீது போலீசார் வழக்குபதிவும் செய்தனர். மதுரையிலிருந்து கொடைக்கானலுக்கு சென்றபோது ‘நான் ஜனநாயகன் ஷூட்டிங்கிற்காக செல்கிறேன். யாரும் என்னை பின் தொடர வேண்டாம் என சொல்லிவிட்டு சென்றார் விஜய். ஆனாலும், கொடைக்கானலில் அவருக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். எனவே, வேறு வழியில்லாமல் ரோட் ஷோ நடத்தினார் விஜய். அரசியலுக்கு வந்துவிட்டதால் இதை செய்தாக வேண்டிய நிலையில் விஜயும் இருக்கிறார்.

இந்நிலையில், இன்று காலை மதுரை விமான நிலையத்திற்கு அவர் வரவுள்ளதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே நடந்தது போது விமான நிலையத்தில் கூட்டம் கூட இந்த முறை போலீசார் அனுமதிக்க மாட்டார்கள் என்றே கருதப்படுகிறது.