சிங்கப்பூரில் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள ஒரு புதிய ‘அதிநவீன’ பெயிண்ட், வீட்டை மின்சாரம் இல்லாமலேயே இயற்கையாக குளிர வைக்கும் என்று கூறப்படுகிறது. அது எப்படியென்றால் — உடல் சுரப்பதைப் போல, இந்த பெயிண்ட் “வியர்வை சுரக்கிறது!” என்று அதற்கான விளக்கம் கூறப்பட்டுள்ளது.
விஞ்ஞானிகள் கண்டுபிடித்தது என்ன?
சிங்கப்பூரில் உள்ள நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் உள்ள விஞ்ஞானிகள் குழு, சிமெண்ட் அடிப்படையிலான ஒரு புதிய பெயிண்ட் உருவாக்கியுள்ளனர். இது சாதாரண குளிர் பெயிண்டுகளுடன் ஒப்பிடும்போது முற்றிலும் மாறுபட்டது.
-
இது நீர் எடுத்து வைத்து மறுபடியும் மெதுவாக வெளியே விடுகிறது.
-
வெளியேறும் நேரத்தில் நீர் ஆவியாகும் போது, வெப்பத்தையும் எடுத்துச் செல்கிறது.
-
இதனால் வீடு இயற்கையாக குளிராகிறது.
மூன்று வழிகளில் குளிர்ச்சியை ஏற்படுத்தும் இந்த பெயிண்ட்:
-
கதிர்வீச்சு குளிர்ச்சி (Radiative Cooling) – வெப்பத்தை வெளி அலைகளாக அனுப்பும்
-
ஆவிப்பாடு குளிர்ச்சி (Evaporative Cooling) – வியர்வை போல நீரை ஆவியாக மாற்றி குளிர்விக்கும்
-
சூரிய ஒளியை பிரதிபலிக்கும் (Solar Reflectivity) – வெப்பத்தை உள்ளே வரவிடாமல் தடுக்கும்
இது 88%-92% வரை சூரிய ஒளியை பிரதிபலிக்கிறது (ஈரமாக இருந்தபோதும்!)
மேலும் 95% வரை உள்ளே புகும் வெப்பத்தை வெளியே அனுப்புகிறது.
வீட்டில் சோதனை
இரண்டு வருட சோதனைக்காலத்தில், சிங்கப்பூரில் உள்ள மூன்று சிறிய வீடுகளில் இந்த பெயிண்ட் பயன்படுத்தப்பட்டது:
-
ஒன்று சாதாரண வெள்ளை பெயிண்ட்
-
ஒன்று குளிர் பெயிண்ட்
-
மூன்றாவது, இந்த புதிய “வியர்வை பெயிண்ட்”
முதல் இரண்டு வீடுகளும் வெள்ளை நிறம் மங்கிப் போனது. ஆனால் இந்த புதிய பெயிண்ட் மட்டும் “இன்னும் பளிச்சென வெள்ளையாகவே இருந்தது” என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
மின்சார சேமிப்பு & சூழலியலுக்கு நன்மை
-
இந்த பெயிண்ட் கூலிங் தேவையை 30-40% குறைத்தது.
-
வீடுகளுக்கு ஏசி தேவையை குறைத்து, மின்சாரத்தை சேமிக்க முடிகிறது.
-
60% மின் தேவைகள் வீடுகளில் கூலிங் தான் என்பதை நினைவில் கொள்வோம்!
நகரங்களில் உள்ள வெப்ப தீவுக் காட்சியை (Urban Heat Island Effect) இந்த பெயிண்ட் தவிர்க்க உதவும். ஏசிகள் வெளியே வெளியேறும் வெப்பத்தை சேர்த்துக் கொண்டே இருக்க, இந்த பெயிண்ட் வெப்பத்தை ‘இன்ஃப்ராரெடு’ அலைகளாக மேலே அனுப்பி விடுகிறது.
எதிர்கால வெப்பத்தைக் கட்டுப்படுத்தும் நம்பிக்கை
வெப்பம் அதிகரிக்கும் இந்நாள்களில், இயற்கையை பாதிக்காமல், மின்சாரம் இல்லாமல் வெப்பத்தை சமாளிக்க இந்த கண்டுபிடிப்பு மிகுந்த பயனளிக்கக்கூடியதாக இருக்கலாம்.
“சிங்கப்பூர் மட்டும் இல்லை; மத்திய கிழக்கு நாடுகளும் கடும் வெப்ப தீவுக் காட்சியை சந்திக்கின்றன” என ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.அந்த வகையில் இது போன்ற சூழலை பாதிக்காத கண்டுபிடிப்புகள் காலநிலை மாற்றத்தால் உருவாகும் வெப்பத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் உதவுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.