பாடவேளை மற்றும் விடுமுறையில் மாற்றம்.. பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வரும் குட் நியூஸ்!!

Photo of author

By Gayathri

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து நேற்று (10.06.2024) பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் பல முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் தான் நேற்று பள்ளி தொடங்கிய முதல் நாளிலேயே மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.

இந்த வரிசையில் தான் பள்ளிக்கல்வி துறை சார்பில் இந்த 2024-2025-ம் ஆண்டிற்கான பள்ளி வேலை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்கள் குறித்த அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. இந்த அட்டவனையில் 10,11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் குறித்த எந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை என்றும் இந்த அட்டவணை முழுவதும் ஆசிரியர்களுக்கு எதிராக இருப்பதாவும் ஆசிரியர்கள் தரப்பில் புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை கொடுக்கப்பட்டுள்ள கால அட்டவணையில் அனைத்து வகுப்புகளுக்கும் முதல் பாடவேளை தமிழகாக இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டள்ளது. ஆனால் அது நிச்சயம் சாத்தியப் படாது என்றும் ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுவரை ஒரு வாரத்திற்கு 28 பாடவேளைகள் தான் கடைப்பிடிக்கப்பட்டது, ஆனால் தற்போது வெளியிட்டுள்ள இந்த அட்டவணையில் வாரத்திற்கு 40 பாடவேளைகள் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே குறைந்த அளவிலான ஆசிரியர்களை கொண்ட பள்ளிகளில் ஆசிரியர் ஓய்வின்றி வகுப்புக்கு செல்ல வேண்டியது இருக்கும் அதிலும் இந்த வருடம் புதிதாக மாணவர்களின் தனித்திறனை மேம்படுத்துவதற்காகவும் பாடவேளைகள் கொடுக்கப்பட்டுள்ளன எனவே அந்த பாட வேளைகளுக்கு செல்லும் ஆசிரியர்கள் யார் என்பது என பல சிக்கல்கள் உள்ளதாகவும் அவர்கள் கூறுயுள்ளனர்.

மேலும் அதிக சனிக்கிழமைகள் பள்ளிகள் செயல்படுவது ஆசிரியர்கள் மட்டுமின்றி மாணவர்களையும் அதிக அளவில் பாதிக்கும் என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே இதுகுறித்து பேசிய கல்வி உயர் அதிகாரி இது தற்காலிக வகுக்கப்பட்ட அட்டவணை தான் என்றும் இதுகுறித்த கருத்துக்களை msectndsegmail.com மெயில் ஐடிக்கு அனுப்பினால் அது பரிசீலனை செய்யப்படும் என்றும் கூறியுள்ளார். இதன் மூலம் பார்க்கும் போது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஏற்றாற்போல ஒரு கால அட்டவணை விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.