இனி கல்லூரிகளில் பயோமெட்ரிக் வருகை பதிவு தான்!! உயர்கல்வித்துறை அதிரடி உத்தரவு!!

Photo of author

By Sakthi

Biometric attendance registration: பயோமெட்ரிக் வருகை பதிவு முறை பல்கலைக்கழகங்களில் நடைமுறைப்படுத்த உயர்கல்வித்துறை  உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறிப்பாக தமிழக பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் வேலை நாட்களில் தாமதமாக வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு அதிக அளவில் எழுந்து வந்தது. அது மட்டுமல்லாமல் வேலை நேரங்களில் எவ்வித வேண்டுகோள் இன்றி சென்று விடுகிறார்கள் என்ற  குற்றச்சாட்டு வந்துள்ளது. அதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக உயர்கல்வித்துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதாவது பல்கலைக்கழகங்களில் ஊழியர்கள் பலர் தாமதமாகவே  அலுவலகத்திற்கு வருகை புரிகிறார்கள்  என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.  இது போன்று ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் அலுவலக வருகை நேரம் கடைபிடிக்காமல் இருப்பது, பணி நேரங்களில் வெளியே செல்வதால் மாணவர்களின் கல்வி பாதிப்படைகின்றது.

மாணவர்கள் ஆசிரியர்கள் இருவருக்கிடையே எவ்வித புரிதலும் ஏற்படுவதில்லை என்பது தான் உண்மை. எனவே ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள்  வருகையை துல்லியமாக கணக்கீடு செய்ய ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அலுவலகங்களுக்குள் நுழையும் பொது பயோமெட்ரிக் சாதனங்களில் தங்களது வருகையை பதிவு செய்யும் வகையில் பயோமெட்ரிக் சாதனங்கள் வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தாமதமாகவும் பணி நேரங்களில் எந்தவித முன் அறிவிப்பும்  இன்றி வெளியே செல்ல முடியாது என்ற அளவிற்கு  இந்த பயோமெட்ரிக் வருகை பதிவு முறை அமையும். மேலும் மாணவர்கள் வருகைப்பதிவை பயோமெட்ரிக் சாதனம் மூலம் பதிவு செய்ய ஆலோசனை நடந்து வருவதாக உயர்கல்வி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.