தமிழ் மொழி மீது ஹிந்தியை திணிக்க முடியாது – ஆளுநர் ரவி!!

Photo of author

By Rupa

தமிழ் மொழி மீது ஹிந்தியை திணிக்க முடியாது – ஆளுநர் ரவி!!

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழ் பேசும் பனாரஸ் பல்கலைக்கழக மாணவ மாணவிகளுடன் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி கலந்துரையாடினார்.

தமிழ்நாடு தர்ஷன் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஆளுநர் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளிடம் பேசிய ஆளுநர் ரவி தமிழ் மொழி மீது ஹிந்தி உட்பட எந்த மொழியையும் திணிக்க முடியாது

ஹிந்தி மொழியை விட தமிழ் மொழி மிகவும் பழமை வாய்ந்தது. சமஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான பழமை வாய்ந்த மொழி. தமிழ் மீது ஹிந்தி உட்பட எந்த மொழியையும் திணிக்க முடியாது. தமிழ் இல்லாமல் பிறமொழி பேசுபவர்கள் தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தை கற்றுக் கொள்ள நினைப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது என்றார்.

மேலும் இந்தியாவின் ஆன்மீகம் மற்றும் கலாச்சார தலைநகராக தமிழ்நாடு இருப்பதாகவும் தமிழ்நாட்டுக்கு 3500 ஆண்டுகளுக்கு மட்டுமல்ல அதற்கும் முந்தைய வரலாறு உண்டு என குறிப்பிட்டார் எனவே தமிழை ஆழமாக படிக்க வேண்டும் தமிழில் அறிஞர்களாக மாற வேண்டும்.