இந்தித் திணிப்பு: வைகோ ஆவேசம்!

Photo of author

By Parthipan K

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கைத் திட்டத்தினை செயல்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. இதன் மூலம்  மும்மொழிக் கொள்கையில் இந்தி மொழியை இந்தியா முழுமைக்கும் இந்தி கற்க வேண்டுமென அறிவுறுத்தி வருகிறது.

இது குறித்து மதிமுக தலைவர் வைகோ பேசியதாவது,”இந்திய மாநிலங்களில் ஒற்றுமையுடன் வாழ பன்முகத் தன்மையை மத்திய பாஜக அரசு குலைக்க நினைக்கிறது.
பன்முகத் தன்மைதான் இந்தியாவின் ஒற்றுமைக்கு பலம் சேர்க்கிறது. இதனை பாஜக உணரவில்லை”.

“இந்தி ஆதிக்கத்தை நிலைநிறுத்த மத்திய அரசு முயன்றால், அடிமுதல் நுனிவரை வேரறுக்கப்படும். வேரோடும், வேரடி மண்ணோடும் சாய்க்கப்படும்” என வைகோ ஆவேசம் அடைந்து கூறியுள்ளார்.