தமிழகத்தில் வலுபெறும் இந்துத்துவா அமைப்புகள்!
மாவட்ட தலைவர்களை நியமிக்கும் பாரதிய ஹிந்து பரிவார்!
தமிழகத்தில் ஹிந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சங் பரிவார் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு இந்துத்துவா அமைப்புகள், கட்சிகள் தமிழகத்தில் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது.
இந்துத்துவா அமைப்பான பாரதிய இந்து பரிவார் அமைப்பு தேசிய அளவில் மிகவும் பிரபலமானது. பாரதிய ஜனதா கட்சியுடன் தொடர்புடைய இந்த அமைப்பு பல்வேறு ஆன்மீகம் சார்ந்த நிகழ்வுகளை முன்னெடுத்து வருகிறது.
அடுத்தாண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலை கவனத்தில் கொண்டு பாரதிய ஜனதா கட்சி, இந்துத்துவா அமைப்புகளை வளர்த்து விடுவதில் குறிக்கோளாக உள்ளதுடன், அந்த அமைப்புகளுக்கு பக்க பலமாகவும் உள்ளது.
பாரதிய ஹிந்து பரிவார் அமைப்பின் மாநில தலைவர் டாக்டர்.திரு. S. செல்வகணேஷ் ஜி அவர்கள் பல்வேறு ஆன்மீகம் சார்ந்த செயல்பாடுகளில் அதிகம் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். சமூக சேவைகளையும் அவர் செய்து வருகிறார்.
இந்நிலையில், அவரின் உத்தரவின்படி மாநில செயலாளர் டாக்டர்.ராகவன் அவர்களின் பரிந்துரை உடன் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட பொறுப்பாளர்கள், தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள்.
அந்த வகையில், மதுரை மாவட்டம் தலைவராக சமூக செயற்பாட்டாளரும், பிரபல கட்டட பொறியாளருமான திரு. ரா.சுரேஷ் பாலாஜி அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, தொடர்ந்து ஆன்மீக சேவையாற்றி வரும் நான், இந்து மத கோவில்களை சீர்படுத்தி மேம்படுத்துவதே எனது முக்கிய நோக்கம் என்று கூறினார். மேலும், பல்வேறு விதங்களில் தொடர்ந்து மக்கள் சேவையாற்றுவதே முதல் இலக்கு என்றும் தெரிவித்தார்