சைந்தவி ஒரு கர்நாடக பாடகி ஆவார். இவர் தனது ‘முன்னாள் கணவன் ஜி.வி. பிரகாஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார்’. இவர்களுக்கு ‘அன்வி’ என்ற பெண் குழந்தை உள்ளது. கடந்த மே 13,2024 இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.
இவர்களது விவாரத்து குறித்து பல பதிவுகள் வெளியான நிலையில், இவ்விருவருமே, ‘அவர்களது X வலைத்தளத்தில் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் இது “எங்களின் தனிப்பட்ட முடிவு எனவும், இதைப்பற்றி யாரும் அவதூறு செய்திகளை பரப்ப வேண்டாம்” எனவும் பகிர்ந்து இருந்தனர்’. அதன்பின் மலேசியாவில் நடந்த கான்செப்டில், இருவரும் இணைந்து பாடியது குறிப்பிடத்தக்கது. அந்த கான்செப்டின் போது ஜிவி பாடுகையில், ‘அவரது மகள் அன்வி அப்பாவிடம் செல்ல வேண்டும்’ என சைந்தவியிடம் கூறியுள்ளார். அதனை கவனித்த ஜீ. வியும் தன் மகளை ஸ்டேஜ்க்கு வரும்படி சிக்னல் செய்தார். அதைக் கவனித்த ‘சைந்தவியும் சிறிதும், நேரம் தாளாது அனுப்பி வைத்தார்’.
அந்த கான்செப்டிலே ஜீவி, ‘தன்னுடன் இணைந்து சைந்தவி பாடிய பாடல்கள் மிகவும் ஹிட்டானது’. அதற்காக ‘சைந்தவிக்கு மிகவும் நன்றி’ எனக் கூறியுள்ளார். அதே ஸ்டேஜில் சைந்தவி பேசும் போதும், “என்னுடைய நிறைய பாடல்கள் ஜீவியின் இசையில்தான் வெளியானது”. ‘இந்த வாய்ப்பிற்காக ஜீவிக்கு நன்றி என சைந்தவியும் தெரிவித்துள்ளார்’.
‘என்னுடைய பாடல்கள் மூலம் பல குழந்தைகளை தூங்க வைத்துள்ளேன்’. ஆனால் “என் குழந்தைக்கோ, நான் பாட ஆரம்பித்தாலே தூங்க வைப்பதற்கு என நினைத்து ‘அம்மா நோ நீங்க பாடாதீங்க’ என்று அன்வி குட்டி சொல்லி விடுவாளாம்” என சைந்தவி ஒரு பேட்டியில் தன் குழந்தையின் அழகான நுண்ணறிவை எடுத்துக் கூறியுள்ளார்.