தன்னுடைய படமே தனக்கு எதிரி!! வெங்கட் பிரபு புலம்பல்!!

Photo of author

By CineDesk

தன்னுடைய படமே தனக்கு எதிரி!! வெங்கட் பிரபு புலம்பல்!!

CineDesk

His image is his enemy!! Venkat Prabhu Lament!!

தன்னுடைய படமே தனக்கு எதிரி!! வெங்கட் பிரபு புலம்பல்!!

இயக்குனர் வெங்கட் பிரபு சென்னை 600028, சரோஜா, மங்கத்தா, மாசு என்கிற மாசிலாமணி, பிரியாணி போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவர் சிம்பு வைத்து இயக்கிய மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இந்த திரைப்படம் சிம்பு மற்றும் வெங்கட் பிரபு இருவருக்குமே ஒரு நல்ல  கம்பேக் ஆக இருந்தது.

மாநாடு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு  தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை வைத்து கஸ்டடி படத்தை இயக்கி இருந்தார்.  இது தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகியிருந்தது.  ஆனால் இந்த திரைப்படம் தோல்வியை தழுவியுள்ளது.

தற்போது விஜயின் அடுத்த படத்தை வெங்கட் பிரபுதான் இயக்கப் போகிறார். இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. விஜயின் லியோ படம் முடிவடைந்தவுடன் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்க உள்ளது. வெங்கட் பிரபு  ஏற்கனவே ஏஜிஎஸ் நிறுவனத்திற்காக, சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் இயக்குவதாக இருந்தது.

இந்த படத்திற்காக வெங்கட் பிரபு 7 கோடி சம்பளம் கேட்டுள்ளார். ஆனால் தற்போது விஜய் படத்திற்காக 20 கோடி சம்பளமாக கேட்டுள்ளார். ஆனால் ஏஜிஎஸ் நிறுவனம் 10 கோடி மட்டுமே தர முடியும் என கூறியுள்ளது. இதற்கு கஸ்டடி படத்தின் தோல்விதான்  காரணம் என கூறப்படுகிறது. அவருடைய படமே அவருடைய சம்பளத்தை குறைத்துள்ளது. வெங்கட் பிரபுவுக்கு அவர் கேட்ட சம்பளத்தை  மறுத்துள்ள ஏஜிஎஸ் நிறுவனம் விஜய்க்கு 120 கோடிக்கு மேல் சம்பளம் தரத்  தயாராக இருக்கிறது.