அவரது இசைக்கு இதெல்லாம் ஒன்றுமே இல்லை! இசைமாமணியை தொடர்ந்து அனிருத்தையும் விமர்சித்த பிரபல தொகுப்பாளர்

Photo of author

By Vijay

சசிகுமார் இயக்கிய சுப்ரமணியபுரம் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தான்.ஜேம்ஸ்  வசந்தன்.  அதன் பிறகு ஈசன்,  நாணயம் போன்ற படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார்.   விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.  இவர் இசை அமைப்பாளராக இருப்பினும் மக்கள் மத்தியில் தொகுப்பாளராக  அறியப்பட்டவர்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் இசையமைப்பாளர் அனிருத்தை கடுமையாக விமர்சித்து இருக்கிறார். அப்பேட்டியில் “இப்போது வெளியாகும் அனிருத்தின் பாடல்களில் இருக்கும் இசை ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கு சவாலாகவே இல்லை. அதை நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அது சினிமா ரசிகர்களுக்கே தெரியும். என்றும் , மேலும்  வேறு வழியே இல்லாமல் தான் அனிருத் பாடல்கள் ஹிட் ஆகின்றன, என்றும் சங்கர் போன்ற பெரிய தயாரிப்பாளர்கள் அனிருத் இசை  வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

உலகின் நம்பர் ஒன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தான் என்று கூறி இருந்தார்.  சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜேமஸ் வசந்தன்  இளையராஜாவின் “என்னுள்ளே என்னுள்ளே” பாடலை குறை சொல்லி சமூக வலைத்தளப் பதிவை வெளியீட்டார் . இதற்கு இசையமைப்பாளர் அனிருத் கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.