வாட்ஸ்ஆப் மூலம் பாலியல் தொல்லையை அரங்கேற்றிய வரலாறு ஆசிரியர்! அள்ளி தூக்கிய போலீசார்!
முதலில் பாலியல் அத்துமீறல்கள் பேருந்துகளிலும், பொது இடங்களிலும் நடைபெறும். இது குறித்து கேட்டால் பெண்கள் ஒழுங்காக உடை அணியவில்லை அதனால் ஆண்களுக்கு அந்த எண்ணங்கள் வருகிறது என மிகவும் சுலபமாக கூறி இருந்தனர். தற்போது பள்ளி மாணவிகளுக்கும் இந்த மாதிரி கொடுமைகள் அல்லது சிறு குழந்தைகளுக்கும் இந்த மாதிரி கொடுமைகள் எல்லாம் நடக்கிறது.
பள்ளியை நம்பி, ஆசிரியரை நம்பி பள்ளிக்கு வரும் எதிர்காலம் எப்படி இருக்கும் என அனைவரும் யோசிக்க ஆரம்பித்து விட்டோம். ஆனால் இந்த மாதிரியான கேடு கெட்ட மனிதர்களும் திருந்துவேனா என்ற விதத்தில் இப்படி தான் நடந்து கொள்கிறார்கள். இது ஒவ்வொரு பெண்ணுக்கும் தவறாமல் நடக்கிறது. இது ஒவ்வொரு இடத்திலும் நடைபெற்று வரும் ஒரு விஷயம் தான்.
ஆனால் தற்போது இணையங்கள் வாயிலாகவும், பெண் பிள்ளைகள் மிகவும் தைரியமாக உள்ளதன் காரணமாக மாணவிகளும், பெண்களும் இதை வெளியே சொல்ல முன்வந்துள்ளனர். சட்டங்கள் கடுமையானால் மட்டுமே இந்த மாதிரியான சில நபர்கள் திருந்துவார்கள். நாம் தவறுகளை முழுவதுமாக குறைக்க முடியும். இல்லாவிட்டால் அவர்களுக்கு என்ன என்று சில வருடங்கள் சிறையில் இருந்துவிட்டு மீண்டும் வந்து அதே தவறைத்தான் மீண்டும் செய்வார்கள்.
பள்ளி மாணவிகளுக்கு தொல்லை என்று செய்திகள் படித்து வந்தோம் அல்லவா? இது கொஞ்சம் வித்தியாசமாக ஆசிரியருக்கு நடந்த கொடுமை. ராமநாதபுரம் நாகாச்சி பகுதியை சேர்ந்தவர் சந்திரன். 52 வயதான இவர் பரமக்குடி அருகே உள்ள சந்திரகுடி அரசு மேல்நிலைப்பள்ளியில் வரலாற்று பாடத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் வாட்ஸ்அப் மூலம் ஆசிரியை ஒருவருக்கு பல ஆபாசமான தகவல்களை அனுப்பி நாளடைவில் தொல்லை தர ஆரம்பித்து உள்ளார்.
அதன் காரணமாக அந்த ஆசிரியை தற்போது சந்திரகுடி போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் இது குறித்து விசாரணை நடத்தி, அந்த ஆசிரியர் சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து அவரது கைபேசியை ஆய்வு செய்தார். அப்போது அவர் அந்த ஆசிரியைக்கு ஆபாச தகவல்கள் அனுப்பியதும், பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததும் தெரியவந்துள்ளது. எனவே சந்திரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.