வரலாறு மாற்றி அமைக்கப்பட்டது! சென்னை மற்றும் மும்பை அணிகள் படைத்த சாதனை!!

0
314
#image_title
வரலாறு மாற்றி அமைக்கப்பட்டது! சென்னை மற்றும் மும்பை அணிகள் படைத்த சாதனை!
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் வரலாற்றை மாற்றி அமைத்துள்ளது.
2022ம் ஆண்டு நடந்த ஐபிஎல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், ல்கோனோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் புதிதாக அறிமுகமானது. அறிமுகமான முதல் சீசனில் கோப்பையை கைப்பற்றி குஜராத் டைட்டன்ஸ் அணி சாதனை படைத்தது. 4 முறை சேம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சென்ற ஆண்டு இரண்டு போட்டிகள் மற்றும் நடப்பாண்டு ஒரு லீக் போட்டி என்று விளையாடிய 3 லீக் போட்டிகளிலும் குஜராத் அணி சென்னயை தோற்கடித்து 3-0 என்று வெற்றி பெற்றது.
இதையடுத்து 23ம் தேதி நடைபெற்ற ஐபிஎல் தொடரின் முதல் குவாலிபையர் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வென்று 3-1  என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரலாற்றை மாற்றி அமைத்தது. மேலும் கடந்த சீசன் மற்றும் இந்த சீசன் என இரண்டு சீசன்களில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எந்தவொரு அணியும் ஆல் அவுட் செய்தது இல்லை. 23ம் தேதி நடந்த முதல் குவாலிபையர் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியை ஆல் அவுட் செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் இதன் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணியை ஆல் அவுட் செய்த முதல் அணி என்ற சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படைத்துள்ளது.
அதே போல கடந்த சீசனில் அறிமுகமான லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியை மூன்று முறை எதிர்கொண்டு மூன்று லீக் போட்டிகளிலும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி வெற்றி பெற்று 3-0 என்று முன்னிலையில் இருந்தது. இந்த வரலாற்றையும் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் லக்னோ அணியை தோற்கடித்து மும்பை இந்தியன்ஸ் அணி வரலாற்றை மாற்றி அமைத்துள்ளது.
வரும் வெள்ளிக் கிழமை அதாவது மே 26ம் தேதி அஹமதாபாத்தில் நடைபெறும் இரண்டாவது குவாலிபையர் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடுகின்றது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி ஞாயிற்று கிழமை அதாவது மே 28ம் தேதி நடக்கும் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர் கொள்ளவுள்ளது.
Previous articleபகுதி நேர வேலை என்று வந்த விளம்பரம்! 46 லட்சம் மோசடி செய்த இளைஞர்!!
Next articleஅண்ணா பல்கலைகழகங்களில் மாணவர் சேர்க்கை நிறுத்தம்!!