அண்ணா பல்கலைகழகங்களில் மாணவர் சேர்க்கை நிறுத்தம்!!

0
157
#image_title
அண்ணா பல்கலைகழகங்களில் மாணவர் சேர்க்கை நிறுத்தம்!
நடப்பு கல்வியாண்டில் அதாவது 2023 மற்றும் 2024ம் ஆண்டுக்காண கல்வியாண்டில் அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் உறுப்பு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைகழகத்ததின் கீழ் சில உறுப்பு கல்லூரிகள் இயங்கி  வருகின்றது. இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டில் அதாவது 2023 மற்றும் 2024ம் கல்வியாண்டில் பல்கலைகழகத்தின் கீழ் இயங்கி வரும் சில உறுப்பு கல்லூரிகளில் தமிழ் மற்றும் ஆங்கில வழி இளங்கலை பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது.
திண்டிவனம், விழுப்புரம், ஆரணி, திண்டுக்கல், அரியலூர், ராமநாதபுரம், பண்ருட்டி, திருக்குவளை, நாகர்கோயில், பட்டுக்கோட்டை, தூத்துக்குடி ஆகிய இடங்களில் உள்ள உறுப்பு கல்லூரிகளில் பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற மாணவர் சேர்க்கையை அடிப்படையாக வைத்து இந்த நடவடிக்கை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பொறியியல் கல்லூரிகளில் தற்பொழுது மாணவர் சேர்க்கை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.