தொண்டையில் ஒரே எரிச்சல் கரகரப்பு நீங்க.. அதற்கு உடனே இதை செய்யுங்கள்!!

Photo of author

By Sakthi

தொண்டையில் ஒரே எரிச்சல் கரகரப்பு நீங்க.. அதற்கு உடனே இதை செய்யுங்கள்!!
மழைகாலம் தொடங்கியுள்ள நிலையில் அனைவருக்கும் நோய் தொற்றுகள் ஏற்படுவது வழக்கம். அதே போல சளி, இருமல் பிரச்சனை ஏற்படும். இதில் இருமல் அதிகமாக இருக்கும் பொழுது நமக்கு தொண்டையில் புண்கள் ஏற்படும். மேலும் தொண்டை எரிச்சல் ஏற்படும்.
பொதுவாக தொண்டை எரிச்சல் குளிர் காலம் அல்லது மழை காலங்களில் ஏற்படும் வைரஸ் அல்லது பாக்டீரியாக்களால் ஏற்படுகின்றது. இவ்வாறு தொண்டை எரிச்சல் இருக்கும் பொழுது நாம் காரமான உணவுகளை சாப்பிடக் கூடாது. காரமான உணவுகளை ஒதுக்குவதே இதற்கு சிறந்த மருந்து.
இருப்பினும் இதிலிருந்து குணமாக நாம் சில வைத்தியங்களை செய்து தான் ஆக வேண்டும். அந்த வகையில் தொண்டை எரிச்சலை குணப்படுத்த என்ன செய்ய. வேண்டும் என்று தற்பொழுது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்…
* பாதாம்
* தேன்
செய்முறை…
முதலில் பாதாம் பருப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை மிக்சி ஜாரில் போட்டு விழுது போல அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அரைத்த இந்த விழுதை ஒரு சிறிய பவுல் ஒன்றுக்கு மாற்ற வேண்டும்.
பின்னர் அரைத்த இந்த பாதாம் விழுதில் தேன் சிறிதளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை நன்றாக கலந்துவிட்டு பின்னர் இதை அப்படியே சாப்பிட வேண்டும். இதை தொடர்ந்து செய்தால் தொண்டை எரிச்சல் மட்டுமின்றி தொண்டை வலி, தொண்டை புண் ஆகிய தொற்றுகளும் குணமாகும்.