என் முந்தானையை பிடித்து இழுத்தாங்க…ஸ்டாலினிடம் கெஞ்சினேன்! கட்சிக்காக பல்லை கடித்துக் கொண்டு இருந்தேன்!

Photo of author

By Rupa

என் முந்தானையை பிடித்து இழுத்தாங்க…ஸ்டாலினிடம் கெஞ்சினேன்! கட்சிக்காக பல்லை கடித்துக் கொண்டு இருந்தேன்!

குஷ்பூ முதலில் திமுக வில் இருந்தார்.அதன்பின் காங்கிரஸ் கட்சிக்கு தாவினார்.அதன்பின் தற்போது பாஜக வில் இணைந்துள்ளார்.இவர் பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட உள்ளார்.இவர் என் திமுக விலிருந்து விலகினேன் என்பதை செய்தியாளர்களை சந்தித்து கூறினார்.அதில் அவர் கூறியது,என்னை திமுக தொண்டர்கள் என் புடவை முந்தானையை பிடித்து இழுத்தார்கள்.

அவரது பெண் வேட்பாளர்கள் கொச்சையாக பேசினார்கள்.என் வீட்டில் கல்லை கொண்டு எரிய ஆரம்பித்தார்கள்.நான் ஸ்டாலினை பார்க்க வேண்டும் எனக் கேட்டேன்.அதற்கு அவர்கள் அவர் சாப்பிட்டு கொண்டிருக்கிறார்,பார்க்க முடியாது என்று கூறிவிட்டார்கள்.அதன்பின் பார்க்க வேண்டும் என கேட்டேன்.அப்போதும் அவர் என்னை பார்க்க அனுமதிக்கவில்லை.அதன்பின் என் இரண்டு பெண் பிள்ளைகள் வீட்டில் இருக்கிறார்கள் எந்த வித பிரச்சனையும் வீட்டிற்கு கொடுக்காதீர்கள் எனக் கேட்டுக் கொண்டேன்.

அவர்கள் எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை .என்னை விட்டுவிடுமாறு கெஞ்சினேன்.ஆனால் ஸ்டாலின் எதையும்  கேட்கவில்லை.பிறகு அவரது தந்தை கருணாநிதிக்கு இச்சம்பவங்கள் அனைத்தும் தெரிய வந்தது.அதன்பின் தான் பிரச்சனைகள் அனைத்தும் கட்டுபாட்டிற்குள் வந்தது.அவர் தன்னை சென்னையில் இருக்க வேண்டாம் ஹைத்ராபாத் செல்லும்படி பத்திரமாக அனுப்பிவைத்தார்.அக்கதை அனைவருக்கும் தெரிந்தது தான் என்றார்.

இவற்றை பற்றியெல்லாம் நான் புகார் அளிக்காமல் பல்லைக் கடித்துக் கொண்டு இருந்தற்கு காரணம்,காருனாநிதி அவர்கள் தான்.அவர் மீது நான் அதிக அளவு மரியாதை வைத்துள்ளேன் என்றார்.எனக்கே இங்கு பாதுகாப்பு இல்லை.தமிழகத்தில் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும் எனக் கேட்டார்.ஆனால் தற்போது குஷ்பூ திமுக வின் கோட்டையான ஆயிரம் விளக்கு தொகுதியிலேயே களமிறங்கி தேர்தல் பிரச்சாரத்தை நடத்தி வருகிறார்.அவர் கடைசி வரைக்கும் ஏன் திமுக வை விட்டு வெளியேறினார் எனக் கூறவில்லை.அதற்கு அவரின் பதில்,நான் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ஏன் திமுகவை விட்டு வெளியேறினேன் என்று கூறுகிறேன் என்றார்.