அரசு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை! பள்ளி கல்வித்துறை வெளியிட்ட திடீர் அறிவிப்பு!
கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் தான் மீண்டும் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது.
மேலும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மாண்டஸ் புயலின் தாக்கம் அதிகம் காணப்பட்டதால் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் போன்ற பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. அதனால் பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர். அதனைதொடர்ந்து அரையாண்டு விடுமுறை, தீபாவளி பண்டிகை விடுமுறை, கிறிஸ்துமஸ், கார்த்திகை தீப விடுமுறை என பள்ளிகளுக்கு தொடர் விடுமுறையாகவே இருந்தது.
கடந்த ஜனவரி மாதம் இரண்டாம் தேதி தான் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்த நிலையில் பள்ளிகள் மீண்டும் தொடங்கப்பட்டது. ஜனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இவ்வாறு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை வருவதனால் நடப்பு கல்வி ஆண்டின் பாடத்திட்டத்தை முழுமையாக முடிக்க முடியாமல் ஆசிரியர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
அதன் காரணமாக உயர்கல்வித்துறை கல்லூரிகளுக்கு இனி சனிக்கிழமை அன்றும் வகுப்புகள் நடைபெறும் என அண்மையில் அறிவிப்பை வெளியிட்டது. மேலும் அடுத்த மாதம் 10, 11,12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் கதிர்காமத்தில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோவிலில் வருடம் தோறும் செடல் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.
இந்த விழாவை காண்பதற்காக புதுச்சேரி மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள். இந்நிலையில் இந்த ஆண்டு செடல் திருவிழா கடந்த இரண்டாம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான செடல் திருவிழா இன்று கொண்டாடப்பட உள்ளது. அதனால் புதுச்சேரியில் உள்ள 37 அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.