ஜூலை 10 வரை பள்ளிகளுக்கு விடுமுறை! அரசு  வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

ஜூலை 10 வரை பள்ளிகளுக்கு விடுமுறை! அரசு  வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

இலங்கையானது  மிகவும்  நெருக்கடியில் இருந்து வருகிறது. நெருக்கடியில்லிருந்து மீள்வதற்காக உலக நாடுகளிடம் இலங்கை அரசு நிதியுதவி நாடி வந்தது. அப்போது இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று 7,600 கோடி ரூபாய் கடனுதவி அளிப்பதாக இந்தியா கூறியது.
அதன்படி, 40 டன் டீசல், 11 ஆயிரம் டன் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இந்தியா இலங்கைக்கு கப்பல் மூலம் அனுப்பி வைத்தது.

இலங்கையில் தொடர்ந்து எரிபொருள் பற்றாக்குறை இருந்து வருவதால் இப்பொழுது, தனியார் வாக­னங்­க­ளைப் பயன்­ப­டுத்­து­வ­தில் உள்ள சிர­மம் போன்றவற்றை  நினைவில் கொண்டு இலங்கை அரசானது ஒரு முடிவு எடுத்துள்ளது.

அந்த முடிவில் ஜூலை 10ஆம் தேதி வரை அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்வதற்கு மட்டுமே எரிபொருள் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.  இதன் காரணமாக தனியார்துறை ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றலாம் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் ஜூலை 10-ஆம் தேதி வரை நகரப்புற பகுதிகளில் செயல்படும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Leave a Comment