அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணியை தொடங்க உள்ள நிலையில்,அதற்கான பூஜை முன் எற்பாடுகளை உத்திரபிரதேச அரசு தொடங்கியுள்ளது.ஜூலை 5ஆம் தேதி பூமி பூஜை நடக்க உள்ளதால் ,அதற்கான முன்னேற்பாடுகளை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் இன்று ஆய்வு செய்தார்.
ராமர் கோவிலின் அஸ்திவார விழாவை கொண்டாடும் வகையில் பல்வேறு முக்கிய புனிதயாத்திரை இடங்களில் பூஜைகள் நடைபெற தொடங்கியுள்ளனர்.
மேலும் ஆகஸ்ட் 3(இன்று) மற்றும் நாலாம் தேதி மதுரா, வாரணாசி ,சித்ராகூட் பிரயாக்ராஜ் மற்றும் கோரக்பூர் ஆகிய இடங்களில் பிரத்தனையும், அகந்த் ராமாயண நூல்களும் ஓதவும் உள்ளது.
மேலும் யோகி ஆதித்யநாத் அவர்கள் இவ்விடத்தின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு தொடர்ந்து அறிவுறுத்தி உள்ளார். ஜூலை 31 ஆம் தேதி ராமர் கோயில் விழாவிற்கு யமுனை,யமுனோத்ரி நதியில் இருந்து புனிதநீர், இமயமலை பகுதியில் வளரும் பிரம்ம கமலம் பூ ஆகியவற்றை பூசாரிகள் விஷ்வா இந்து பரிஷத் அலுவலக பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்தனர்.மேலும் கங்கோத்ரி மண் மற்றும் கங்கை நதியின் நீர் ஆகியவற்றை ராமர் கோயில் பணிக்கு அனுப்பப்படுவதாக கூறினார்.கோயில் கட்டும் பணியில் யோகி ஆதித்யநாத் அவர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதாக தெரித்தனர்.
இது மட்டுமின்றி பல்வேறு புனித தலங்கள்,கோவில் தீர்த்தம், மண், ஆடைகள், மலர்கள் ஆகிய பூஜை பொருட்கள் அயோத்தி பகுதி அனுப்படுவதாக கூறப்படுகிறது.
இப்பூஜையில்கலந்து கொள்ள அனைத்து மாநில முதல்வர் ,துணை முதல்வர், மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள் உட்பட பலர் இவ்விழாவில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் தெரிவிக்கிறனர்.