வீட்டு மனை வாங்குபவர்கள்.. CMDA & DTCP அப்ரூவல் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!
வீட்டு மனை அல்லது காலி நிலம் வாங்குவதற்கு என்னென்ன நடைமுறைகள் இருக்கிறது என்று அனைவரும் அறிந்து வைத்திருக்க வேண்டும்.இன்று நிலத்தை வைத்து பல மோசடிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் பிளாட்,காலி நிலம்,கட்டிய மனைகள் வாங்குவதில் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
நீங்கள் வாங்க உள்ள காலி நிலம் அல்லது வீட்டிற்கு CMDA/DTCP அப்ரூவல் இருக்கிறதா என்று தெரிந்து கொண்டு வாங்க வேண்டும்.
CMDA(Chennai Metropolitan Development Authority)
நீங்கள் வாங்க இருக்கின்ற நிலம் சிட்டிக்குள் இருந்தால் அதற்கு CMDA அப்ரூவல் இருப்பது கட்டாயம்.கட்டிய மனைகளை வாங்க நினைப்பவர்கள் வீட்டிற்கான லேஅவுட் வரைபடத்தில் CMDA எண் இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்வது நல்லது.இது பற்றி தெரியாதவர்கள் வழக்கறிஞர்கள் மூலம் நிலத்திற்கான முழு விவரத்தை தெரிந்து கொள்ளலாம்.அனைத்தும் சரி பார்த்த பின்னரே பத்திரப்பதிவு செய்ய வேண்டும்.
DTCP(Directorate of Town & Country Planning)
நீங்கள் வாங்கும் நிலம் அல்லது மனை நகரத்திற்கு வெளியில் இருந்தால் அதற்கு DTCP அப்ரூவல் இருப்பது கட்டாயம்.வீட்டுமனை சாலையின் அகலம் உள்ளிட்ட பிற விஷயங்களைக் கணக்கில் கொண்டு DTCP அப்ரூவல் கொடுக்கப்படுகிறது.
CMDA மற்றும் DTCP அலுவலகங்களில் அப்ரூவல் பெற A,B,C என்று மூன்று வகை விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.இதில் விண்ணப்பம் B தான் வீட்டு கட்ட அனுமதி பெற பயன்படுத்தப்படுகிறது.இந்த B விண்ணப்பத்துடன் சில ஆவணங்களை இணைத்து CMDA/DTCP அப்ரூவல் பெற வேண்டும்.