ஊர்க்காவல் படையினை மீட்டெடுக்குமா தமிழக அரசு!

1963 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப்போர் நடந்தபோது நாட்டின் சட்ட ஒழுங்கை பாதுகாக்கும், பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்காமல் இருக்க தோற்றுவிக்கப்பட்ட அமைப்பு தான் ஊர்காவல்படை. கடந்த 65 ஆண்டுகளாக காவல்துறைக்கு இணையாக அனைத்து வேலைகளும் அவ்வப்போது உயர் காவல் அதிகாரியின் தேவைகளை பூர்த்தி செய்து தமது பணிகளை திறம்பட செய்து வருகிறார்கள்.

இதுமட்டுமில்லாமல் விஐபி பாதுகாப்பு, கோவில் திருவிழா பாதுகாப்பு, சட்ட ஒழுங்கு பாதுகாப்பு, சாலை போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு தன்னலமற்ற உதவி செய்து வருகிறார்கள். ஊர்க் காவல் துறையில் பணிபுரியும் இவர்களுக்கு மற்ற மாநிலங்களை காட்டிலும் மிக சொற்பமான ஊதியத்தை வழங்கி ஊர் காவல் படையினரை தமிழ்நாடு அரசு கொத்தடிமையாக வைத்துள்ளது.

அதுமட்டுமின்றி தற்போது கொரோனா பாதுகாப்பு பணியில் தன் உயிரையும் துச்சமாக நினைத்து, தன் குடும்பத்தை வேரோடு தூக்கி எறிந்து இரவு பகல் பாராமல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி, தடை செய்யப்பட்ட பகுதியிலும் எந்த ஒரு பாதுகாப்பு உபகரணமும் இன்றி பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி ஊதியம் மற்றும் உணவு படி முறையாகவே இன்னும் வழங்கப்படவில்லை.

சமீபத்தில் நடந்த சாத்தான்குளம் பிரச்சனையில் சம்பவத்திலிருந்து பல மாவட்டங்களிலிருந்து காவல்துறையில் உதவி புரிந்த ஊர் காவல் படையினரை வேலையில் இருந்து நீக்கப்பட்டனர். இதனால் தொடர்ந்து வேலையில் இருந்த ஊர்க்காவல் படையினர் வேலை இன்றியும், வருமானம் இன்றியும் தவிக்கின்றனர். அதில் நீக்கப்பட்ட ஊர்காவல் படையினர் மற்றும் தற்போது பணிபுரியும் காவல்படையினர் குறைந்த ஊதியத்தை கொண்டு அதிக அளவு வேலை பார்க்கின்றனர்.

குறைந்த ஊதியம் கொடுப்பதால் அவர்களின் வாழ்வாதாரம் ஒரு கட்டத்தில் இருக்கிறது. இது தனியார்மயம் ஆனதினால் இவர்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கை முறை கிடையாது. இதனால் 16 ஆயிரம் குடும்பங்களும் கேள்விக்குறியாக உள்ளது. 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போதும், 2016ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போதும், ஊர்காவல்படை ஆற்றிய பணி ஈடு இணையற்றவை.

எனவே தமிழ்நாடு மாவட்ட காவல்துறை நிர்வாகம் உடனடியாக ஊர் காவலர்களின் கோரிக்கைகளை தமிழக அரசுக்கு முன்வைத்து மக்களின் பாதுகாவலன் ஊர்காவல் படையினர் மீட்டு எடுத்து அவர்களின் ஊதியத்தை உயர்த்தி தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கின்றனர் ஊர்காவல் படையினர்.

Leave a Comment