பிரதமரின் பாதுகாப்பு விதிமீறல்! பஞ்சாப் மாநில டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பிய மத்திய உள்துறை அமைச்சகம்!

0
119

சென்ற 5 ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் மேம்பாலத்தில் பிரதமர் நரேந்திர மோடி 15 முதல் 20 நிமிடங்கள் சீக்கி பாதுகாப்பு மீறல் தொடர்பான விவகாரத்தில் விசாரணை செய்ய அந்த மாநில அரசு 3 பேர் கொண்ட குழுவை அமைத்த சூழ்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் பஞ்சாப் மாநில டிஜிபி சித்தார்த் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

சிறப்பு பாதுகாப்பு குழு சட்டத்தின் கீழ் டிஜிபிக்கு விதிக்கப்பட்ட சட்டபூர்வ கடமைகளை நீங்கள் மீறி இருக்கிறீர்கள் என்பதற்கு முதல் கட்ட முகாந்திரம் தெளிவாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில், உங்கள் மீது அகில இந்திய சேவை சட்டத்தின் அடிப்படையில் ஐபிஎஸ் ஐஎஎஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கான தனிப்பட்ட சட்டம் உள்ளிட்டவைகள் அடிப்படையில் ஏன் நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது? என்று கேள்வி எழுப்பியிருக்கிறது மத்திய உள்துறை அமைச்சகம்.

இதற்கான பதிலை ஜனவரி மாதம் 8ம் தேதி அதாவது இன்று மாலை 5 மணிக்குள் உள்துறை அமைச்சகத்திற்கு நீங்கள் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் நீங்கள் எந்த பதிலையும் கூறவில்லை என்று கருதி உங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஜனவரி மாதம் 6ம் தேதி உள்த்துறையின் துணை செயலாளர் அர்ச்சனா வர்மா கையெழுத்திட்டு நோட்டீஸ் ஒன்றை வழங்கியிருக்கின்றார்.

இதுபோன்ற நோட்டீஸ்கள் பதிண்டா எஸ் எஸ் பி, பெரோஸ்பூர் எஸ்எஸ்பி, உள்ளிட்டோருக்கும் அனுப்பப்பட்டு இருக்கின்றது. அவர்களுக்கான நோட்டீஸில் பிரதமரின் வாகனத்திற்கு 100மீட்டர் முன்பு போராட்டக்காரர்கள் திரண்டிருக்கிறார்கள். இதனால் 15 முதல் 20 நிமிடங்கள் வரையில் பிரதமர் கான்வாய் வாகனம் ஸ்தம்பித்து நின்றது. இது தவிர்க்கப்பட வேண்டிய மிக கடுமையான பாதுகாப்பு விதி மீறல் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது வரையில் எங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்த போராட்ட பகுதியில் பஞ்சாப் மாநில காவல்துறையினர் செயலற்றவர்களாக இருந்திருக்கிறார்கள். பிரதமரின் வழித்தடம் முழுவதும் மிக குறைவான காவல்துறை நிறைய பணியில் ஈடுபட்டிருந்தார்கள் என்று உள்துறை துணை செயலாளர் குறிப்பிட்டிருக்கிறார்.

இதற்காகவே பஞ்சாப் பிரதமர் பயண பாதுகாப்பு மீறல் தொடர்பாக விசாரிக்க பஞ்சாப் மாநில அரசு மத்திய அரசு உள்ளிட்டவை அமைத்த விசாரணை ஆணையங்கள் நாளை மறுநாள் வரையில் தங்கள் செயல்களை ஆரம்பிக்கக் கூடாது என்று நேற்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்திய போதும் மத்திய விசாரணை குழுவினர் தங்கள் செயல்பாடுகளை ஆரம்பித்துவிட்டார்கள்.

பிரதமர் என்பவர் நாட்டின் அதிமுக்கிய நபர்களில் ஒருவர் அவருடைய பாதுகாப்பில் விதிமீறல்கள் ஏற்பட்டிருக்கும் போது அது தொடர்பாக விசாரணை நடத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்து இருப்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

பிரதமரின் கான்வாய் வாகனம் நின்ற இடத்தை மத்திய குழுவினர் நேற்று பார்வையிட்டனர் முன்னதாக பஞ்சாப் மாநில டிஜிபி உட்பட 13 அதிகாரிகளை பெரொஸ்பூருக்கு வரவழைத்தது அந்த குழு.

இதற்கு நடுவில் பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் கான்வாய் வாகனம் ஸ்தம்பிப்பு குறித்து அடையாளம் தெரியாத போராட்டக்காரர்கள் மீது வழக்குப்செய்யப்பட்டு இருக்கிறது.

Previous articleஇன்று கொரோனா மெகா தடுப்பூசி முகாம்! ஒரே கிளிக்கில் இடத்தை தெரிந்து கொள்ள ஈசியான வழி
Next articleஅரசு பள்ளிகளில் சிசிடிவி கேமரா மதுரை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! எதற்காக தெரியுமா?