அரசு பள்ளிகளில் சிசிடிவி கேமரா மதுரை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! எதற்காக தெரியுமா?

0
136

புதுக்கோட்டை மாவட்டம் திருமணஞ்சேரி பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்துதர கோரிக்கை விடுத்தும், சமூக விரோத செயல்களில் இருந்து பள்ளிக்கூடத்தை பாதுகாக்கவும், உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள் தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து பள்ளி வளாகங்களிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்த அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று நம்புவதாக தெரிவித்தார்கள்.

அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் உண்டாக்குவது குறித்த முந்தைய உத்தரவை நிறைவேற்ற இதுவரையில் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது என்பது தொடர்பாகவும், அரசு தரப்பில் அறிக்கை அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டார்கள். அதன் பிறகு வழக்கு விசாரணையை மூன்று வாரத்திற்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

பள்ளிகளில் மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறது தொடர்பாகவும், நீதிமன்றம் நேரடியாக தலையிட்டு இதற்கு ஒரு நிரந்தர தீர்வை காணவேண்டும் என்பது பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் விருப்பமாக இருக்கிறது.

சமீபகாலமாக பெண் பிள்ளைகளிடம் அத்துமீறி நடக்க முயற்சி செய்யும் ஆசிரியர்களின் செயல் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இதனால் மாணவிகள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களும், ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. ஆனால் இதற்கு உரிய தீர்வு என்பது இதுவரையில் கிடைக்கப் பெறவில்லை.

அவ்வாறு ஆசிரியர்களால் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்படும் மாணவிகளை உரிய முறையில் எடுத்துக்கூறி கூறி அவர்களுக்கு உளவியல் ரீதியான கலந்தாய்வு வழங்கி அவர்கள் மனதில் ஒரு தனித்தன்மை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில, அரசுகள் மேற்கொண்டால் நன்றாக இருக்கும்.