காலையில் தூங்கி எழுந்ததும் Tired ஆ இருக்கா? தூக்கம் வருகிறதா? அப்போ இதான் காரணம்..!!

Photo of author

By Priya

Body tired remedy in Tamil: ஒரு சிலருக்கு காலையில் தூங்கி எழுந்ததும் தூக்கம் வருவது போல இருக்கும். ரொம்ப Tired ஆக இருப்பார்கள். உடல் சோர்வாக எந்த வேலையும் செய்ய தோணாமல் இருக்கும். ஒரு சிலருக்கு இந்த உடல் சோர்வினால் ஒற்றை தலைவலி கூட வரலாம். இதனால் அவர்களுக்கு அந்த நாள் முழுவதும் மிகவும் சோர்வாக எதையும் செய்ய விருப்பம் இல்லாமல் இருப்பார்கள்.

ஒருசிலர் நான் இரவு எப்பொழுதும் போன்று தான் தூங்கினேன். ஆனால் ஏன் இந்த உடல் சோர்வு காலையில் தூங்கி எழுந்ததும் இவ்வாறு ஏற்படுகிறது என கவலையடைவார்கள். இதனால் அன்று ஏதாவது முக்கிமான வேலை செய்ய வேண்டும் இவ்வாறு இருக்கும் போது அதனை எப்படி பார்ப்பது என்ற கவலையும் இருக்கும். இந்த உடல் சோர்வு எதனால் வருகிறது? அதனை எப்படி தடுக்கலாம் என்பதை தற்போது (natural remedies for tiredness in Tamil) பார்க்கலாம்.

உடல் சோர்வு Tired -ஆ இருக்க காரணம்

முதலில் பெரும்பாலும் உள்ளவர்களுக்கு காலையில் எழுந்ததும் உடல் சோர்வாக காரணம் அவர்கள் இரவில் சரியான தூக்கம் இல்லாததால் இவ்வாறு இருக்கும். ஆனால் பெரும்பாலானவர்கள் நான் இரவு எப்பொழுதும் போல தான் தூங்கினேன் என்று கூறுவார்கள். ஆனால் இரவு தூங்கும்போது நமது உடலில் சுரக்கும் ஹார்மோன்களால் நமது உடலின் திசுக்கள் புத்துணர்வு பெறும். ஆனால் சில சமயங்களில் திசுக்கள் புத்துணர்வு பெறாமல் அப்படியே இருந்தால் இது நல்ல தூக்கம் இல்லை என்று அர்த்தம். இதனால் கூட உடல் சோர்வு ஆகி தூக்கம் வரும்.

அடுத்ததாக மனஅழுத்தம், கவலை எதைப்பற்றியாவது நாள் முழுவதும் யோசித்துக்கொண்டு இருந்தால் நமது உடல் சோர்வாகி இவ்வாறு நடக்கும்.

உடல்பருமன் இதுவும் முக்கிய காரணமாகும். நமது எடை உயரத்திற்கு ஏற்ற உடை எடை குறைவாக இருந்தாலும், அதிகமாக இருந்தாலும் உடல் எடை சோர்வாக இருக்கும்.

பகல் நேரத்தில் தூங்கினால் உடல் சோர்வு ஏற்படும். மேலும் ஹைப்போ தைராய்டு ஹார்மோன் குறைவாக இருந்தால் இவ்வாறு ஏற்படும்.

இரத்த சோகை, அதாவது இரும்பு சத்து குறைபாடு இருந்தால் உடல் சோர்வு ஏற்படும். மேலும் வேலையில் டென்ஷன் இருந்தால் இவ்வாறு ஏற்படும்.

மது அருந்துபவர்களுக்கு இது அடிக்கடி ஏற்படும்.

அடிக்கடி காபி குடிக்கும் நபராக இருந்தாலும் இந்த பிரச்சனை ஏற்படும்.

மேலும் பருவநிலை மாற்றம், உணவு பழக்கவழக்கங்களினால் இவ்வாறு ஏற்படும்.

தடுப்பது எப்படி?

இவ்வாறு உடல் சோர்வாக இருக்கும் போது வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து ஒரு கசாயம் செய்து குடித்தால் உடல் சுறுசுறுப்பாக மாறிவிடும்.

தேவையான பொருட்கள்

  • இஞ்சி- சிறிய துண்டு
  • எலுமிச்சை பழம் -1
  • தேன் – 1 ஸ்பூன்

முதலில் இஞ்சியை துருவி எடுத்து 200 மிலி தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து 100 மிலி வரும் வரை கொதிக்க வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு எடுத்து வடிக்கட்டி வெதுவெதுப்பாக இருக்கும் போது 1/2 எலுமிச்சையை பிழிந்து, அதில் தேன் சேர்த்து காலை வெறும் வயிற்றில் குடித்தால் உடல் சோர்வு நீங்கி விடும்.

மேலும் படிக்க: இந்த இலையை மட்டும் சாப்பிடுங்க போதும்… மூலம் இருந்த இடமே தெரியாமல் போய்விடும்..!