சிறுநீரகக் கல்லா? கவலையே படாதீங்க! 7நாட்களில் கரைக்கும் மூலிகை!

Photo of author

By Kowsalya

சிறுநீரகக் கல்லா? கவலையே படாதீங்க! 7நாட்களில் கரைக்கும் மூலிகை!

சிறுநீரகத்தில் கல் இருந்தால் எப்படிப்பட்ட வலி ஏற்படும் என்று அதன் வலி உள்ளவர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாகும். அதனால் ஏற்படும் வலியானது தற்கொலைக்கு தூண்டும் வகையில் மிகப் பெரும் கவலையாக இருக்கும். உடனடியாக ஆபரேஷன் செய்து கல்லை எடுத்துக் விட்டாலும் சிறுநீரக தொற்று பிரச்சினைகள் ஏற்படும். சிறுநீர்த்தாரை எரிச்சல், சிறுநீரகப் பாதை தொற்று என பலவிதமான நோய்கள் தொடர்ந்து வரும்.

இதனை இயற்கை முறையில் சரி செய்வது ஒரு நல்ல தீர்வாக அமையும். அப்படிப்பட்ட மூலிகைதான் இப்பொழுது நாம் பார்க்கவிருக்கிறோம்.

இதன் பெயர் ரணகள்ளி. நீங்கள் பறிக்க பறிக்க அது வளர்ந்து கொண்டே தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கும்.இதற்கு தண்ணீரோ மழையோ தேவையில்லை காற்றின் ஈரப்பதத்தை வைத்து அது செழிப்பாக வளர்ந்து விடும். உடலில் இதன் இலை பட்டால் உடல் சிவந்து தடித்து விடும். கவனம் தேவை.

சிறுநீரக கல்லை கரைப்பதற்காக இந்த மூலிகை பயன்படுத்தப்படுகிறது. சிறுநீரகத்தில் எவ்வளவு பெரிய கல் அடைப்பு இருந்தாலும் இதனை சாப்பிட்டால் சிறு சிறு துகள்களாக பிரித்து சிறுநீர் வழியே வலியின்றி வெளியேற்றும் தன்மை உடையது ரணகள்ளி.

ரணகள்ளி செடியை நீங்கள் பிடுங்கி எடுத்து உண்ண வேண்டும் என்பது அவசியமில்லை.

1. முதல் நாள் ரணகள்ளி செடி சிறிய இலையிலிருந்து தொடங்கி 7 நாட்கள் பெரிய இலைகளை மென்று முழுங்கி சாப்பிட வேண்டும்.

2. சிறிய இலையில் இருந்து தொடங்கி பெரிய இலை வரை உண்ண வேண்டும். இவ்வாறு சாப்பிட்டுவர கல் இருந்த இடமே தெரியாமல் ஓடி விடும்.

3. முதல் நாள் சிறிய இலை, அடுத்த நாள் அதற்கு கொஞ்சம் பெரிய இலை, அதற்கு கொஞ்சம் பெரிய இலை அதுபோன்று ஏழு நாட்களுக்கு சாப்பிட வேண்டும்.

4. எடுத்த உடனே பெரிய இலைகளில் ஆரம்பிக்காதீர்கள். சிறிய சிறிய இலைகளில் இருந்த பெரிய பெரிய இலைகள் வரை உண்ண வேண்டும்.

மேலும் இந்த ரணகள்ளி மூலிகை ஆனது வெட்டு காயத்திற்கு மருந்தாக பயன்படுகிறது. இதன் இலையை பறித்து அரைத்து புண்களின் மேல் பற்று போட விரைவில் மறையும்.

காது வலிக்கு காது சொட்டு மருந்தாகவும் பயன்படுகிறது.

ரணகள்ளி இலையின் பவுடர் ஆனது மலச்சிக்கலைப் போக்கும் தன்மை உடையது.

முடி வளர்ச்சிக்கும் மற்றும் நரைமுடி போவதற்கும் இந்த இலை பயன்படுகிறது.