நகசுத்தி என்பது ஒரு பூஞ்சை மற்றும் பாக்டீரியா வினால் உருவாகக்கூடியது.இதை ஒரு சிறிய விஷயம் என்று நீங்கள் பொருட்படுத்தாமல் விட்டுவிட்டால் விரலையே இழக்கும் அபாயம் கூட ஏற்படும் வாய்ப்பு உள்ளது. வீட்டிலேயே நக சுத்தி குணம் செய்வது எப்படி என்பதைப் பற்றி பார்ப்போம்.
1. கற்றாழை சோற்றுக்கு நகசுத்தி நீக்கும் தன்மை கொண்டது. கற்றாழை ஜெல்லை எடுத்து அதனுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து நல்லெண்ணெயை ஊற்றி சுட வைத்து இரவில் நகசுத்தியின் மீது பூசி வர நகசுத்தி நீங்கும்.
2. அதேபோல் ஆப்பிள் சீடர் வினிகர் அல்லது வெள்ளை வினிகரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அரை மணி நேரம் விரலை அதில் வைத்து எடுத்த பின் உடனடி தீர்வு கண்டிப்பாக கிடைக்கும்.
3. உப்பு நீரில் பாதிக்கப்பட்ட விரலை வைத்தாலும் நகசுத்தி சரியாகும். கல்லுப்பு கூட பயன்படுத்தலாம்.
4. சோடாவின்னால் செய்த பசையை நகசுத்தி விரல்களின் மீது தடவும் பொழுது அதிலுள்ள பூஞ்சைகள் இறந்து விரல்கள் சரியாகிறது.