கழுத்தை சுற்றி காணப்படும் கருமையை மறைய வைக்கும் வீட்டு வைத்திய குறிப்புகள்!!

0
72

நம் கழுத்து பகுதியில் இறந்த செல்கள்,எண்ணெய் பிசுக்கு போன்றவை அதிகளவு படிந்தால் அவை நாளடைவில் கருமையாகிவிடும்.முகம் பொலிவாக இருந்தாலும் கழுத்துப் பகுதி கருப்பாக இருந்தால் அழகு குறைந்துவிடும்.எனவே இதை வீட்டுப் பொருட்களை கொண்டு மறைய வைக்க முயலுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)கஸ்தூரி மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
2)பால் – இரண்டு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் கஸ்தூரி மஞ்சள் தூளை கிண்ணத்தில் கொட்டிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் பசும் பால் ஊற்றி நன்கு மிக்ஸ் செய்ய வேண்டும்.

இதை கழுத்து பகுதியை சுற்றி அப்ளை செய்து நன்றாக உலர்த்திக் கொள்ள வேண்டும்.இவை நன்றாக காய்ந்து வந்ததும் ஒரு காட்டன் துணியில் ரோஸ் வாட்டர் ஊற்றி கழுத்தை சுற்றி அழுத்தம் கொடுத்து தேய்க்க வேண்டும்.இப்படி செய்வதால் கழுத்தை சுற்றி இருந்த கருமை அனைத்தும் முழுமையாக நீங்கிவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)கஸ்தூரி மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
2)தேன் – ஒரு தேக்கரண்டி
3)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
4)தயிர் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

கிண்ணம் ஒன்றில் கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் தூயத் தேன்,எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

அதற்கு அடுத்து கஸ்தூரி மஞ்சள் தூளை போட்டு நன்றாக மிக்ஸ் செய்து கழுத்தை சுற்றி அப்ளை செய்து நன்கு உலர வைக்க வேண்டும்.

பிறகு வெது வெதுப்பான நீரில் கழுத்தை சுற்றி தேய்க்க வேண்டும்.இதை தொடர்ந்து செய்து வந்தால் கழுத்து கருமை நீங்கிவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)காபித் தூள் – ஒரு தேக்கரண்டி
2)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

கிண்ணத்தில் காபித் தூள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கழுத்தை சுற்றி அப்ளை செய்தால் அழுக்கு,எண்ணெய் பிசுக்கு மற்றும் கருமை அனைத்தும் நீங்கிவிடும்..

தேவையான பொருட்கள்:-

1)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
2)பேக்கிங் சோடா – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

எலுமிச்சம் பழத்தை நறுக்கி அதன் சாறை கிண்ணத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.பின்னர் அதில் பேக்கிங் சோடா சேர்த்து கரையும் வரை மிக்ஸ் செய்து கழுத்து பகுதியில் அப்ளை செய்து காய வைத்து பிறகு வெது வெதுப்பான நீர் கொண்டு சுத்தம் செய்தால் கருமை நீங்கிவிடும்.தினமும் குளிக்கும் பொழுது கஸ்தூரி மஞ்சள் பொடியை நீரில் குழைத்து கழுத்தை சுற்றி அப்ளை செய்து குளித்தால் கழுத்து கருமை நீங்கும்.

Previous articleகுளிர்காலத்தில் உடல் கதகதப்பாக இருக்க.. இந்த சிறுதானியத்தில் சூப் செய்து குடிங்க!!
Next articleவிறைப்புத் தன்மை பிரச்சனையை எதிர்கொள்ளும் ஆண்கள்.. இந்த வேரை பாலில் சேர்த்து பருகுங்கள் போதும்!!