முகத்தில் காணப்படும் DARK SPOTS-ஐ போக்கும் வீட்டு பொருட்கள்!! ஜஸ்ட் 2 டேஸில் ரிசல்ட் கிடைத்துவிடும்!!

Photo of author

By Gayathri

உங்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை அகற்றி புது பொலிவை பெற இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணவும்.

தேவையான பொருட்கள்:-

1)உருளைக்கிழங்கு – ஒன்று
2)உளுந்து மாவு – இரண்டு தேக்கரண்டி
3)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு மீடியம் சைஸ் உருளைக்கிழங்கை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

பிறகு மிக்ஸி ஜார் எடுத்து உருளைக்கிழங்கு துண்டுகளை போட்டு தண்ணீர் விடமால் அரைக்கவும்.நன்கு பேஸ்ட் பதத்திற்கு அரைத்ததும் உருளைக்கிழங்கில் இருந்து சாறை மட்டும் பிழிந்து ஒரு கிண்ணத்தில் சேர்த்துக் கொள்ளவும்.

அதன் பிறகு ஒரு தேக்கரண்டி உளுந்து பருப்பை வாணலியில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து பொடியாக்கி உருளைக்கிழங்கு சாறில் போட்டு கலந்து கொள்ளவும்.அதற்கு அடுத்து ஒரு தேக்கரண்டி சுத்தமான தேனை அதில் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும்.இந்த க்ரீமை முகத்திற்கு அப்ளை செய்து 20 நிமிடத்திற்கு பிறகு குளிர்ந்த நீரில் வாஷ் செய்யவும்.இப்படி தினமும் செய்து வந்தால் ஒரே வாரத்தில் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் அனைத்தும் காணாமல் போய்விடும்.

தேவையான பொருட்கள்:-

1)கற்றாழை ஜெல்
2)தேன்

செய்முறை விளக்கம்:-

பிரஸ் கற்றாழை ஜெல் இரண்டு தேக்கரண்டி எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ளவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி தூயத் தேன் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து முகத்திற்கு அப்ளை செய்யவும்.சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவி சுத்தம் செய்யவும்.இப்படி தினமும் செய்து வந்தால் கரும்புள்ளி பாதிப்பு ஏற்படாது.

தேவையான பொருட்கள்:-

1)ஐஸ் கியூப்
2)அரிசி ஊறவைத்த தண்ணீர்

ஒரு கப் அரிசி ஊறவைத்த நீர் எடுத்துக் கொள்ளவும்.பிறகு அதில் இரண்டு அல்லது மூன்று ஐஸ் கியூப் சேர்த்து முகத்தை கழுவி வந்தால் கரும்புள்ளிகள் அனைத்தும் காணாமல் போய்விடும்.