பெண்களின் முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகளை நிரந்தரமாக நீக்குவதற்கு வழிமுறைகள்
பெண்களுக்கு முடிவளர்ச்சியானது சாதரணமான ஒன்று. ஆனால் அதுவே அவர்களது முகத்தில் இருந்தால் அது நன்றாகவே இருக்காது. ஒரு சில ஹார்மோன்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றும் குடும்பத்தினரின் ஜீன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளின் மூலம் முடியானது முகத்தில் வரக்கூடும்.ஒரு சில பெண்களுக்கு மீசை,தாடி கூட வளர நேரிடிகிறது.
இதிலிருந்து எளிதாக விடுபட வீட்டில் இருக்கும் இரண்டு சாதரணமான பொருட்களே போதுமானது.
தேவையான பொருட்கள்:
1.குண்டு மஞ்சள்
2.தூள் உப்பு
செய்முறை:
குண்டு மஞ்சளை நன்கு கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின் மஞ்சளை உராய்க்க கல் ஒன்றினை எடுத்து கொள்ள வேண்டும்.
அதற்குப் பிறகு அந்த கல்லின் மேல் சிறிது உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கி கொள்ள வேண்டும்.
அந்த உப்பு கரைவதற்குள் மஞ்சளினை உப்போடு சேர்த்து உராய்க வேண்டும்.
உராய்த்த பின் கிடைக்கும் மஞ்சளினை முடி இருக்கும் இடத்தில் எதிர்மறையாக சிறிது நேரம் தேய்க வேண்டும்,
அதற்கு பிறகு அரைமணி நேரம் விட்டு அதனை கழுவ வேண்டும்.அப்படி இல்லை என்றால் இரவு தூங்கும் போது கூட தேய்த்து கொண்டு காலையில் எழுந்தவுடன் கழுவி விடலாம்.
இதனை தொடர்ந்து 7 நாட்களுக்கு செய்து வந்தால் முகத்தில் இருக்கும் முடியானது மிக விரைவில் உதிர்ந்து விடும். நிரந்தரமாக அந்த இடத்தில் முடி வளரவே கூடாது என்றால் இதனை தொடர்ச்சியாக ஒரு 2 8 நாட்களுக்கு விடாமல் செய்தால் முடியே வளராது.