இல்லத்தரசிகளுக்கு பயன்படும் அசத்தலான வீட்டு குறிப்புகள்!!

0
229

*வெண்ணெயில் லேசாக உப்பை தூவினால் அது நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.

*நகைகளை பஞ்சில் சுத்தி வைத்தால் புதிது போல் ஜொலிக்கும்.

*சின்ன வெங்காயத்தை வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்தால் ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்.

*ரத்தக்கறை பட்ட துணிகளை உப்புக் சேர்த்த குளிர்ந்த நீரில் சிறிது நேரம் ஊறவைத்து பின் துவைத்தால் கறை போய்விடும்.

*உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளவென ஜொலிக்கும்.

*அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழிப்பாய் வளரும்.

*பீன்ஸ், அவரை போன்ற காய்களை வேக வைக்கும் போது எலுமிச்சை, தக்காளி ஜூஸ் சிறிது பிழிந்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

*உள்ளங்கையில் சிறிதளவு சமையல் எண்ணெய் ஊற்றி தேய்த்துக் கொண்டு மீனை சுத்தம் செய்தால் கைகளில் மீன் வாடை அடிக்காது.

*கோதுமை மாவை நன்கு சலித்து சிறிதளவு உப்பு கலந்து வைத்தால் வண்டுகள் வராது.

*ஒரு வெல்லத் துண்டை நெய்யில் போட்டு வைப்பதனால் அது நீண்ட நாட்களுக்கு கெடாமல் பிரஷ்ஷாக இருக்கும்.

*தேங்காயை தண்ணீரில் நனைத்து பின்னர் உடைக் சரிபாதியாக உடைக்க, வேண்டும்.

Previous articleஒரே இரவில் எப்பேர்ப்பட்ட மாதவிடாய் (Periods) பிரச்சனையாக இருந்தாலும் வந்துவிடும்!
Next articleதொப்பை முழுமையாக நிரந்தரமாக குறைய இதை குடித்தால் போதும்!