தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்! நிதி அமைச்சரின் அறிவிப்பு மகிழ்ச்சியில் தமிழக மக்கள்!

Photo of author

By Sakthi

நடப்பு சட்டசபையின் பதவி காலம் வரும் மே மாதம் 24ம் தேதியுடன் முடிவடைய இருக்கின்ற நிலையில், இன்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு 2021 – 22 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மாநில நிதி அமைச்சரும் மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

சென்னையை தனித்துவம் மிக்க ஒரு நகராக மாறுவதற்கு 3140 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறைக்கு 229 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று நிதி அமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்திருக்கிறார்.

அதேபோல உயர்கல்வித் துறைக்கு ஆயிரத்து 478 கோடி ரூபாய் மற்றும் மின் துறைக்கு 7214 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்திற்கு 300 கோடி ரூபாயும், பயிர் கடன் தள்ளுபடிகாக 5000 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்படுகிறது என்று தெரிவித்திருக்கிறார்.

அதேபோல அம்மா கிளினிக் திட்டத்திற்கு 144 கோடி ரூபாயும், காவல்துறைக்கு 9 ஆயிரத்து 567 கோடி ரூபாயும், பயிர் காப்பீடு திட்டத்திற்காக ஆயிரத்து 738 கோடி ரூபாயும், ஒதுக்கப்படுவதாக தெரிவித்த அவர் 1437 கோடி ரூபாய் நீதித்துறைக்கும் அதோடு 22618 கோடி ரூபாய் ஊரக வளர்ச்சித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்படுவதாக தெரிவித்திருக்கிறார்..

அதேபோல சுகாதாரத் துறைக்கு 19420 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக நிதியமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்திருக்கிறார்.