வீட்டு வாடகை கேட்ட உரிமையாளர்! அதற்கு பெண் போலீஸ் செய்த தில்லாலங்கடி செயல்!
கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி வளாகத்திலேயே போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு இன்ஸ்பெக்டராக வேலை செய்பவர் சுகுணாவள்ளி. 41 வயதான இவர் மருத்துவக்கல்லூரி அருகிலேயே உள்ள ஒரு தனியார் குடியிருப்பில் வசித்து வருகிறார். அது ஒரு வாடகை வீடு என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களாக அவர் வீட்டு வாடகை தராமல் வீட்டின் உரிமையாளரை இழுத்தடித்தார். இதைனையொட்டி கடந்த 2 வாரமாக அந்த வீட்டின் உரிமையாளர் வீட்டு வாடகை கேட்டு பல முறை அவரது வீட்டுக்கு வந்துள்ளார். ஆனால் அந்தப் பெண்ணோ வாடகை தராமல் அவரை அலைக்கழித்து உள்ளார். மேலும் நான் ஒரு போலீஸ் என்றும் மிரட்டி உள்ளார்.
அதை தொடர்ந்து நான் ஒரு போலிஸ் என்னிடமே வாடகை கேட்கிறீர்களா? என்றும் மிரட்டியும் உள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் அவர் வீட்டிற்கு சென்ற வீட்டின் உரிமையாளர் மீது என்னை கற்பழிக்க முயற்சி செய்தார் என கூறி பணியன்கார போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார். அதைத்தொடர்ந்து போலீசார் வீட்டு உரிமையாளரின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் அதைத் தொடர்ந்து அந்தப் பெண்ணிடம் வாடகைக்கு வாங்க இந்த முறை உரிமையாளரின் மருமகன் வந்துள்ளார். மேலும் அந்த பெண் அவர் மீதும் அதே பாலியல் குற்றச்சாட்டை மீண்டும் காவல் நிலையத்தில் பதிவு செய்துள்ளார். இது குறித்த தகவல் போலீஸ் கமிஷனருக்கு தெரியவரவே கோழிகூடு உதவி கமிஷனரை அழைத்து வழக்கை விரைந்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.
எனவே அந்த பெண் இன்ஸ்பெக்டர் கொடுத்த புகாரில் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அதன் பேரில் அந்த வழக்கின் மீது விசாரணை நடத்தும் போது போலீசாருக்கு உண்மை புரிய வந்தது. வீட்டின் உரிமையாளர் வாடகை கேட்டுதான் வந்திருந்தார் என்றும் அவர் மீது எந்த தவறும் இல்லை. மேலும் இன்ஸ்பெக்டர்தான் அவர் மீது தேவை இல்லாமல் அவர் மீதும் அவரது மருமகன் மீதும் தவறான பழி போட்டுள்ளார் என்றும் தெரியவந்தது.
இது குறித்து முழு விசாரணை முடிவடைந்த நிலையில் தற்போது அவரது குற்றத்தை சுகுணாவள்ளி ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் போலீஸ் கமிஷனர் சுகுணாவள்ளியை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டதோடு, அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும்படியும் மாவட்ட போலீசாருக்கு தெரிவித்துள்ளார்.