பாலியல் தொல்லையின் காரணமாக மாணவி தற்கொலை! உடன் படிக்கும் மாணவர்கள் செய்த சிறந்த செயல்!

0
80
Student commits suicide due to sexual harassment! Great work done by fellow students!
Student commits suicide due to sexual harassment! Great work done by fellow students!

பாலியல் தொல்லையின் காரணமாக மாணவி தற்கொலை! உடன் படிக்கும் மாணவர்கள் செய்த சிறந்த செயல்!

கோவை மாவட்டத்தில் ஆர்எஸ் புரத்தைச் சேர்ந்தவர் 17 வயதான மாணவி. இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படித்து வருகிறார். கடந்த வருடங்கள் கொரோனா தொற்று காரணமாக அனைத்து பள்ளிகளும் கல்விக்கான  வழிமுறைகள் அனைத்தும் கைப்பேசி மூலமே  நடந்தேறியுள்ளது.

அதன் காரணமாக பலரது வீட்டில் புது கைப்பேசிகள் வாங்கும் அளவு அது முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தது. அதன் காரணமாக இப்படிப்பட்ட பல்வேறு குற்ற சம்பவங்களும் அரங்கேறிக் கொண்டுதான் உள்ளது. அந்த பள்ளியில் இருந்த இயற்பியல் ஆசிரியர் ஒருவர் இந்த மாணவிக்கு வகுப்புகள் முடிந்த பிறகும் ஆபாசமாக பேசுவதும், ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்புவதும் என்று இருந்துள்ளார்.

இந்நிலையில் இதை பெற்றோரிடம் சொல்லி அந்த பள்ளியில் தொடர்ந்து தனக்கு படிக்க விருப்பமில்லை என்றும், வேறு பள்ளியில் சேர்த்து விடுமாறும், தனது பெற்றோரிடம் மாணவி பலமுறை கூறியுள்ளார். அதன் காரணமாக அவரது பெற்றோரும் வேறு ஒரு மாநகராட்சி பள்ளியில் மாணவியை கடந்த செப்டம்பர் மாதம் சேர்த்தனர். அதனை தொடர்ந்து மாணவி கடந்த சில மாதங்களாகவே மிகுந்த மன உளைச்சலுடன் இருந்ததாக கூறப்படுகிறது.

எனவே சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர்  போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து மாணவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்தனர் என்பது குறித்து, உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அதைத் தொடர்ந்த இந்த வழக்கு உக்கடம் போலீஸ் காவல் நிலையத்தில் இருந்து கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் மாணவி தற்கொலைக்கு முன்பு எழுதி வைத்த கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டதாகவும், அதில் இயற்பியல் ஆசிரியர் உட்பட 3 பேரின் பெயர்களை குறிப்பிட்டு எழுதி இருந்ததும் தெரியவந்தது.

எனவே மாணவியின் செல்போனை கைப்பற்றி அதில் பல ஆய்வுகளை மேற்கொண்டனர். அந்த ஆசிரியர் பெயர் மிதுன் சக்ரவர்த்தி ஆகும். அவர் 31 வயதான நபர். இவரின் மனைவியும் அதே பள்ளியில் வேலை பார்த்து வருகிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது. அதில் ஆசிரியருக்கும் மாணவிக்கும் இடையே நடந்த உரையாடல்கள் மற்றும் தற்போது ஆடியோ ஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த ஆசிரியர் மிகவும் ஆபாசமான முறையில் மாணவிக்கு தொல்லை கொடுத்ததாகவும், மற்றும் அவருடன் பேசிய ஆடியோ ஆதாரங்களையும் தற்போது போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

அதைத்தொடர்ந்து ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை போலீசார் நேற்று மாலை போக்சொவின் மூலம் கைது செய்தனர். மேலும் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அந்த வழக்கை விசாரித்த நீதிபதி அவரை இருபத்தி ஆறாம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் வைக்க உத்தரவிட்டுள்ளார் எனவே ஆசிரியரை உடுமலைப் பேட்டையில் உள்ள சிறையில் அடைத்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து மாணவியின் உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை செய்து முடித்து உடலை தரும்போது மாணவியின் உறவினர்கள் மற்றும் பெற்றோர் உடலை வாங்க மறுத்து சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டத்தில் அவர்கள் அப்போது இதையெல்லாம் கூறியது.

அந்தக் மாணவியின் பெற்றோர் எங்களது மகளுக்கு ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லை குறித்து நாங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் பலமுறை புகார் அளித்தோம். அவர் ஒரு  புகார் மீது கோடஎந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. எனவே அவரும் மாணவியின் தற்கொலைக்கு காரணம் என்று அவரை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

இதனை தொடர்ந்து அனைத்து மகளிர் போலீசார் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவி தற்கொலை செய்வதற்கு முன்பு கடிதத்தில் குறிப்பிட்டிருந்த அந்த 2 பேரையும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கும் இந்த தற்கொலைக்கும் ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்பது குறித்தும், அவர்களும் மாணவிக்கு ஏதேனும் தொல்லைகள் கொடுத்தார்களா? என்பது குறித்தும் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கிடையே மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சக மாணவர்களும் இன்று உயிரிழந்த மாணவியின் வீட்டு அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாணவியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட பள்ளியை மூட வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.1