ஓரினசேர்க்கை உறவு முறை சரி தான் ஆனால் திருமணம் வேண்டாம்!!
பா.ஜ.க எம்.பியின் பரபரப்பு பேச்சு!!
ஓரினசேர்க்கை உறவோடு நின்றால் பரவாயில்லை. ஆனால் திருமணம் செய்வதை மட்டும்
ஏற்றுக் கொள்ள முடியாது என பா.ஜ.க எம்.பி கூறியுள்ளார்.ஆணோடு ஆணும், பெண்ணோடு பெண்ணும் சேர்ந்து வாழும் ஓரின சேர்க்கைக்கு உலக நாடுகள் பலவற்றில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இவர்கள் திருமணம் செய்து வாழவும் சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
முதன் முதலில் மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் தான் இவர்களின் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கிடைத்தது.இந்த கலாச்சாரம் தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. ஒரு காலத்தில் ஓரினச்சேர்க்கை உறவு இந்தியாவில் குற்றமாக கருதப்பட்ட நிலையில் அந்த பாலுணர்வை கொண்டவர்கள் நடத்திய தொடர் சட்டப்போராட்டத்தை நடத்தியதன் விளைவாக கடந்த 2018-ஆம் ஆண்டு ஓரினசேர்க்கை உறவு குற்றம் அல்ல என உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது.
எனினும் இவர்களின் திருமணத்தை இந்திய அரசியலமைப்புச் சட்டம் இன்னும் அங்கீகாரம்
வழங்கவில்லை. ஓரினசேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு சட்ட அங்கீகாரம் வழங்கக் கோரி வழக்கறிஞர் நுபுர் சர்மா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதே போன்று பல்வேறு நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்ததோடு அல்லாமல் இந்த விவகாரம் தொடர்பாக பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்கள் அவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு
சுஷில் மோடி பதில் கூறுகையில் “ஓரினசேர்க்கை என்பது உறவோடு நின்று கொண்டால்
பரவாயில்லை.திருமணம் செய்வதை ஏற்று கொள்ளவே முடியாது”. ஒரே பாலினத்தவர்கள்
தங்களுக்குள் திருமணம் செய்து கொள்வது சமூக கட்டமைப்பை உடைக்கும் செயல். இந்த
விவகாரத்தை 2 நீதிபதிகள் தீர்மானிப்பது அல்ல.
இதுகுறித்து நாடாளுமன்றத்திலும் விவாதம் நடத்தப்பட வேண்டும். இதுபோன்ற கலாச்சார சீரழிவுகளை சுதந்திரம் என்ற பெயரில் அனுமதித்து இந்தியாவை அமெரிக்கா ஆக்கி விடாதீர்கள் என கூறினார். மேலும் ஆங்கில தொலைக்காட்சி ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில் நீதிமன்றம் ஓரினசேர்க்கை குற்றம் அல்ல என கூறியுள்ளது. அதன்படி இது ஒரு உறவு முறையோடு நின்று கொண்டால் பரவாயில்லை.ஆனால் திருமணங்களை அங்கீகரிக்க கூறுவது சரியல்ல.
அப்படி செய்வதில் நிறைய பிரச்சனைகள் உள்ளது. திருமண சட்டம், விவாகரத்து சட்டம், குழந்தைகள் தத்தெடுப்பு சட்டம் என அனைத்தையும் மாற்ற வேண்டும்.மேலும் அது நம் இந்திய கலாச்சாரத்துக்கு ஒத்து வர வேண்டும். எனவும் கூறி இருக்கிறார்.