நிர்வாகிகளின் மாறுபட்ட ஆலோசனைகளில் சிக்கித்தவிக்கும் எதிர்க்கட்சித் தலைவர்!

Photo of author

By Sakthi

நடைபெறவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தல் அனைத்து கட்சிகளுக்கும் கவுரவப் பிரச்சனையாக மாறிவிட்டது. பெரிய கட்சிகளுக்கு ஆட்சியை கைப்பற்ற வேண்டிய அவசியம் இருக்கிறது என்றால், சிறிய கட்சிகளுக்கு அங்கீகாரத்தை காப்பாற்ற வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக,இந்த கட்சிகள் கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சியிடம் அதிக இடங்களை ஒதுக்குமாறு வலியுறுத்தி வருகிறார்கள்.

திமுக கூட்டணியில் இடம் பெற்று வருகின்ற காங்கிரஸ், மதிமுக ,ஐஜேகே முஸ்லிம் லீக், மமக, விசிக போன்ற கட்சிகளை கூட்டினால், திமுகவிற்கு இரட்டை இலக்க இடமாவது கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. கூட்டணி கட்சி தலைவர்கள் உடைய தொடர் வலியுறுத்தல் திமுகவின் நிர்வாகிகளை கோபமுரச் செய்திருக்கிறது.

சமீபத்தில், அறிவாலயத்தில் நடந்த வழக்கமான ஆலோசனைக் கூட்டத்தின்போது, துரைமுருகன் மிகவும் கோபப்பட்டு இருக்கிறார். தனியாக போட்டியிட்டால் டெபாசிட்டுக்கு கூட வழி இல்லாத கட்சி எல்லாம் நம்மை மிரட்டி பார்க்கிறார்கள். இதனை அனுமதிக்கக்கூடாது நம் வழி தனி வழி என போய்க்கொண்டே இருக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் துரைமுருகன். ஆனால் டிஆர் பாலுவோ இப்போதைக்கு அவசரப்பட வேண்டாம் என்று தெரிவித்து சமாதானப்படுத்தி இருக்கின்றார்.

இந்த தேர்தலில் ஆட்சியைப் பிடிக்காவிட்டால், கட்சி மிகவும் மோசமாகிவிடும் என்பதை தெரிந்து வைத்திருக்கின்ற ஸ்டாலின், நடக்கும் நிகழ்வுகளை கண்டு மிகவும் குழப்பத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக திமுக நிர்வாகி ஒருவர் தெரிவித்ததாவது, ஒருபக்கம் அதிக இடங்கள் கேட்டு மிரட்டும் கூட்டணிக் கட்சிகள் இன்னொரு பக்கம் கட்சி நிர்வாகிகள் இடையே மாறுபட்ட கருத்து என்று தலைவர் ஒரு குழப்பமான சூழ்நிலையில் இருக்கின்றார்.

இவர்களுக்கு இடையே சிக்கிக் கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் விக்கித்துப் போய் நின்று கொண்டிருக்கிறார். இதனை தவிர்த்து ஐபேக் நிறுவனம் வேறு தன் பங்கிற்கு ஸ்டாலினை அவ்வப்போது உசுப்பேத்தி விடுகிறது. இந்த குழப்பமான சூழ்நிலையில், ஸ்டாலின் எடுக்கும் முடிவு தவறாக இருக்க கூடாது என்பது தான் எங்களை போன்றவர்களுடைய கவலையாக இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.