காட்டு யானை தாக்கியதில் வீடு சேதம்:? அச்சத்தில் அப்பகுதியினர்?

Photo of author

By Pavithra

கூடலூரை அடுத்துள்ள புளியம் பாறை பகுதில்,நேற்று முன்தினம் நள்ளிரவில் இரண்டு காட்டு யானைகள் அப்பகுதியில் வலம் வந்துள்ளது.மேலும் அங்குள்ள விவசாய நிலங்களை சேதப்படுத்தி கொண்டிருந்ததை கண்டு அப்பகுதியில் வசித்து வந்த பாலசுப்பிரமணியம் என்பவர் அலைபேசியின் மூலம் அருகில் உள்ள வீடுகளுக்கு தகவல் அளித்துள்ளார்.

அப்பொழுது திடீரென்று இரண்டு காட்டு யானைகளில், ஒன்று பாலசுப்பிரமணியனின் வீட்டு சுவற்றை இடித்து உள்ளது.இதில் வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து உள்ளே விழுந்தது.இதனால்,மிகவும் பயந்து போன பாலசுப்பிரமணியனின் குடும்பத்தார் வேறொரு அறையில் பதுங்கினர்.

இதனைக் கண்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அந்த யானையை எப்படியோ விரட்டி விடவே காலை 6 மணியளவில் யானைகள் அங்கிருந்து சென்றது.இதன்பிறகு அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர் யானையை குறித்து விசாரணை நடத்திச் சென்றுள்ளனர்.இதனால் அந்த பகுதி முழுவதும் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது.