அனைத்தையும் வியாபாரமாகவே பார்க்காதீர்கள்! கமலஹாசனுடன் மல்லுக்கட்டும் கங்கனா ரணாவத்!

Photo of author

By Sakthi

இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்கப்படும் என்ற கமல்ஹாசனின் வாக்குறுதிக்கு நடிகை கங்கனா ரனாவத் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன், சட்டசபைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். பிரச்சாரத்தின் போது அவர் பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு கொடுத்து வருகின்றார். சில நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களுக்கு இடையே இல்லத்தரசிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம், வீடு தேடி வரும் அரசு சேவை, வீடுகளை மின்னணு வீடுகளாக மாற்றும் திட்டம் போன்ற ஏழு அம்ச திட்டங்களை மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் தெரிவித்தார்.

இந்தத் திட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், கமல்ஹாசன் உடைய யோசனையை வரவேற்கின்றோம் இல்லத்தரசிகளுக்கு மாதாமாதம் ஊதியத்தை மாநில அரசு கொடுப்பதன் மூலமாக, சமுதாயத்தில் அவர்களின் சேவை பானமாகவும் அங்கீகரிக்கப்படுகிறது. இது அவர்களுடைய சக்தி மற்றும் தனித்தன்மையை மேம்படுத்துவதோடு அடிப்படை வருமானத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும் என்று தன்னுடைய வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனாலும் இதற்கு பதில் தெரிவித்திருக்கின்ற இந்தி நடிகை கங்கனா ரனாவத் எங்கள் அன்புக்கு உரியவர்கள் உடன் ஒன்றிணைவதற்கு ஒரு விலையை நினைக்க வேண்டாம், எங்களுக்கு சொந்தமான அவர்களை தாயைப்போல கவனித்துக் கொள்வதற்கு சம்பளம் எங்களுக்கு எதற்கு? வீடு எனும் சிறிய மாளிகையில் அரசியாக இருப்பவருக்கு ஊதியம் தேவை கிடையாது. அனைத்தையும் வியாபாரமாக பார்த்துக் கொண்டிருக்காதீர்கள் பெண்களிடம் தங்களை ஒப்படைத்து விடுங்கள். உங்களிடம் அன்பையும் மரியாதையையும் தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் உங்களுடைய ஊதியத்தை இல்லை என்று தெரிவித்தார்.